கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
19 Dec 2025, 6:05 pm

முறைப்படி இயக்கப்படாத பேருந்துகள் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ஈரோடு, டிச.19- சோலார் பேருந்து நிலையத்தில் இருந்து முறைப்படி இயக்கப்படாத பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சோலார் அருகே புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. வெள்ளக்கோவில், கொடுமுடி, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், காரைக்கால், திருச்செந்தூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் அனைத்தும் சோலார் புதிய பேருந்து நிலையத்தை மையமாக கொண்டு இயக்க ஆணையிடப்பட் டுள்ளது. ஆனால், அவ்வாறு இயக்கப்படாதது குறித்தும், கட்டணம் குறித்தும் தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியா னது. இந்நிலையில், சோலார் புதிய பேருந்து நிலையத்திலி ருந்து முறையாக இயக்கப்படாத பேருந்துகள் மீது காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, பேருந்து உரிமையாளர்கள் முறையாக இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முட்டைகளில் வேதிப்பொருள் கலப்பு தொடர்பாக ஆய்வு

நாமக்கல், டிச.19- நாமக்கலில் முட்டைகளில் வேதிப்பொருள் கலப்பு தொடர்பாக கோழி பண்ணைகளில் உணவு பாதுகாப்பு அலுவ லர் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் மண்டலத்தில் 2000-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்ப னைக்கு அனுப்பப்படுகின்றது. அதுபோல் வெளிநாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இச்சூழலில் கோழிப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில் நைட்ரோ பைரான் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறையி னரை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நாமக்கல் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலு வலர் செல்வகுமார் கூறுகையில், முட்டைகளில் ஹைட்ரோ ஃபைலான் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் உணவு பாதுகாப்புத்துறை யினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு உணவு பாது காப்பு அலுவலரும் ஐந்து பண்ணைகளில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த இரு தினங்களில் 55 பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆய்வின்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென் னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய் வின் முடிவுகள் இரு வாரங்களில் வெளியாகும். அதன் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

பாதாள சாக்கடைப் பணி: சாலைகளில் கனரக வாகனங்கள் சிக்கி நெரிசல்

கோவை, டிச.19- கோவையில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் பிரதான சாலைகள் தோண்டப் பட்டு சிதிலமடைந்துள்ளன. இதனால் அப்ப குதிகளில் செல்லும் கனரக வாகனங்கள் மண்ணில் புதைந்து சிக்கிக்கொள்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகி றது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணி கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பிரதான சாலைகள் தோண்டப் பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருவதால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள் ளன. இத்தகைய சிதிலமடைந்த சாலைக ளில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட் டுள்ள போதிலும், அவற்றை மீறி வாகனங்கள் செல்வதால் விபத்துகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, சேரன் மா நகர் செல்லும் விளாங்குறிச்சி சாலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின் றன. ஏற்கெனவே இச்சாலையில் ஸ்டீல் உரு ளைகள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத் தில் சிக்கி, உருளைகள் சாலையில் விழுந் தன. அப்போது இருசக்கர வாகனங்கள் செல் லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர், விளாங்குறிச்சி சாலையோரம் உள்ள பேக்கரி கடை நுழைவாயிலில் நள்ளிர வில் கனரக வாகனம் மோதி விபத்து ஏற்பட் டது. தற்போது மீண்டும் அதே சாலையில் தடையை மீறி சென்ற கனரக வாகனம் மண்ணில் புதைந்து சிக்கிக்கொண்டதால், சேரன் மா நகர் செல்லும் சாலையில் மணிக் கணக்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்ட னர். பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது மக்க ளின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. அது வரை சிதிலமடைந்த சாலைகளில் கனரக வாகனங்கள் செல்வதை கண்டிப்பாக தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி மற்றும் போக்குவ ரத்து காவல்துறை இணைந்து கண்கா ணிப்பை தீவிரப்படுத்தி, விதிமீறல் செய்யும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்வரத்து சரிவு

தருமபுரி, டிச.19- கடந்த சில நாட்களாக கர் நாடகா அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்ட தால், ஒகேனகல்லுக்கு நீர் வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. அதன்படி, காவிரி ஆற்றில் புதனன்று 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, வியாழனன்று 2 ஆயிரம் கனஅடியாக சரிந் தது. இதனால், காவிரி ஆற் றில் மூழ்கியிருந்த பாறைகள் வெளியே தெரிகின்றன. இருப்பினும், பிலிகுண்டுலு பகுதியில் நீர்வரத்தின் அளவு குறித்து அதிகாரிகள் கண்கா ணித்து வருகின்றனர்.