புற்றுநோய் சிகிச்சை மருத்துவப் பிரிவு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
17 Feb 2026, 3:36 pm
<p><strong>புற்றுநோய் சிகிச்சை மருத்துவப் பிரிவு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு</strong></p>
<p>திருப்பூர், பிப்.17 - திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணித் துறை சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புற்று நோய் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டடம் 4333 சதுரஅடி பரப்பளவில் பல்வேறு வசதிக ளுடன் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் கதிர்வீச்சு வெளியே வராதபடி இதன் சுவர்கள் முழுவதும் கான்கிரீட்டினால் அமைக்கப்பட் டுள்ளது. தற்போது இப்பணிகள் முடிக்கப்பட் டுள்ளது. ஆட்சியர் ஆய்வின்போது, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மீரா, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை முதல்வர் மனோன்மணி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
