தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தென்காசியில் தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

23 Mar 2026, 3:39 pm
தென்காசியில் தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
<p><strong>தென்காசியில் தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்</strong></p> <p>தென்காசி, மார்ச் 23- தென்காசி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மார்ச் 23 திங்களன்று சட்ட மன்ற பொதுத்தேர்தல் 2026 -ஐ முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் 100சதவிகிதம் வாக்குப்பதிவை வலி யுறுத்தி பொதுமக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். துவக்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தர வின்படி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு &nbsp;பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்க ளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்ப டையில் இன்றைய தினம் தென்காசி பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வா கம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் இளம் வாக்கா ளர்களுக்கு 100 சதவிகிதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கையெழுத்து இயக்கத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு வாக்காளர்களாகிய நீங்கள் வருகின்ற ஏப்ரல் 23 அன்று உங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் . அது மட்டுமல்லாமல், பொதுமக்களாகிய நீங்கள் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து உங்களுடைய உறவினர்கள் மற்றும் இளம் வாக்காளர்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட &nbsp;ஆட்சித் தலைவர் தெரிவித்தார். முன்ன தாக, பொதுமக்களிடையயே 100 சத விகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்மொழிய அனை வரும் ஏற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், திட்ட இயக்கு நர்கள் எஸ்.அபிதா ஹனீப் (மகளிர் திட்டம்), தண்டபாணி ( ஊரக வளர்ச்சி முகமை), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்து மாரியப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (வேளாண்) கனகம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், இளம் வல்லுநர் அகத்தியர், உதவித்திட்ட அலுவலர்கள் டேவிட் ஜெயசிங், சரவண பாண்டியன், பிரபாகரன், ராஜேந்திரன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், அரசு அலு வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.