தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

19 Feb 2026, 3:09 pm
கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
<p><strong>கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு</strong></p> <p>கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு தென்காசி, பிப். 19- தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட முதலியார் பட்டி, ஐந்தாங் கட்டளை, &nbsp; கடையம்பெரும் பத்து ஆகிய ஊராட்சிகளில் 19.02.2026 அன்று ஊரக வளர்ச்சித் துறை கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட &nbsp;பெரும்பத்து ஊராட்சியில் 15 ஆவது நிதிக்குழு மானி யத்திட்டம் (2025-26) இன் கீழ் ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலைப்பணிகளையும், &nbsp;முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.8.44 இலட்சம் மதிப்பீட்டில் சமையலறை கட்டடம் கட்டப்பட்டுள்ள பணிக ளையும், கடையம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் &nbsp;அமைக் கப்பட்டுள்ள &nbsp;நாற்றங்கால் பண்ணையினையும், &nbsp;ஐந்தாங் கட்டளை ஊராட்சியில் &nbsp;மாதிரி அங்கன்வாடி மையத்தில் விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, &nbsp;கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிக ளில் நடைபெற்று வரும் &nbsp;வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். இவ்வாய்வில், &nbsp;கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் &nbsp;விஜயலட்சுமி, ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் பூச்செண்டு, ஒன்றிய பொறியாளர் சந்திரலேகா, மற்றும் அலு வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.