முந்தய பக்கம்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

17 Feb 2026, 3:36 pm
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்  மாவட்ட ஆட்சியர் ஆய்வு
<p><strong>நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் &nbsp;மாவட்ட ஆட்சியர் ஆய்வு</strong></p> <p>மயிலாடுதுறை, பிப்.17- &nbsp;மயிலாடுதுறை மாவட்டம் கோடங்குடி கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் &nbsp;பார்வையிட்டு, நெல் கொள்முதல் பணிகளை ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது நெல் கொள்முதல் தீவிரமடைந்துள்ளதால் ஒரு நாளைக்கு சராசரியாக 5000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் தற்பொழுது நாள் ஒன்றுக்கு 3000 மெ.டன் நெல் அரவை முகவர்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு நகர்வு செய்பப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் முழுவதையும் உடனுக்குடன் நகர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் 1.70 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பிப்.13 வரை சுமார் 49,000 ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 1.21 லட்சம் ஏக்கரில் மேலும் சுமார் 2 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சம்பா பருவத்தில் மின்னணு பரிவர்த்தனை மூலம் இதுவரை 8737 விவசாயிகளுக்கு ரூ.114 கோடியே 21 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் உள்ள விவசாயிகளின் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யவும், தாமதம் இல்லாமல் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நலினா உடனிருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram