தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாசுதேவ நல்லூர் குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

31 Dec 2025, 3:37 pm
வாசுதேவ நல்லூர் குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
<p><strong>வாசுதேவ நல்லூர் குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்</strong></p> <p>தென்காசி, டிச.31- தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் ஊராட்சி எல்கைக்குட்பட்ட ஆத்து வழி குளத்தில் &nbsp; &nbsp;புதனன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே கமல்கிஷோர், மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் மீன்குஞ்சு கள் இருப்பு செய்தல் திட்டத் தினை துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச் சர் 2025 - 2026 &nbsp;ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளா ட்சித்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள நீர்நிலை களில் மீன்குஞ்சுகள் உற் பத்தியினை அதிகரிக்கும் விதமாக 5000 ஹெக்டேர் அளவிலான பஞ்சாயத்து குளங்களில் ஒரு ஹெக்டே ருக்கு 2000 மீன் குஞ்சுகள் வீதம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படவுள்ளது. அதாவது 400 ஹெக்டேரில் 8 இலட்சம் மீன் விரலிகள் இருப்பு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தென்காசி மாவட்டத்திற்குட் பட்ட வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள 400 ஹெக்டேர் அளவிலான ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குளங் கள் தேர்வு செய்யப்பட்டு மீன் விரலிகள் இருப்பு செய்யப்படும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் உள்ளுர் மீன வர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவி கரமாக இருக்கும் என்றார். &nbsp; &nbsp; &nbsp;இந்நிகழ்வில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை (மண்டலம்) தூத்துக்குடி, இணை இயக்குநர் இளம்வழுதி, திருநெல்வேலி, உதவி இயக்குநர், ப.மோகன்ராஜ், (தென்காசி), ஆய்வாளர், சு.பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.