திருவாரூரில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிய மாவட்ட நிர்வாகிகள் நள்ளிரவில் கைது: சிஐடியு கண்டனம்
18 Nov 2025, 2:34 pm
<p><strong>திருவாரூரில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிய மாவட்ட நிர்வாகிகள் நள்ளிரவில் கைது: சிஐடியு கண்டனம்</strong></p>
<p>சென்னை, நவ.18 - திருவாரூரில் ஆட்டோ தொழிலாளர் களுக்கு ஆதரவாக போராடிய சிஐடியு மாவட்ட நிர்வாகிகளை நள்ளிரவில் கைது செய்துள்ள திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன், மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது: திருவாரூர் நகரில் ஆட்டோத் தொழிலாளர் கள் வாகனத்தை நிறுத்துவது குறித்த பிரச்ச னையில் திருவாரூர் நகர காவல்துறை அத்து மீறி, தொழிலாளர்கள் மீது ஒரு மாதத்திற்கு முன்பு தாக்குதல் நடத்தியது. இதை தடுக்கச் சென்ற சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.எம். அனிபா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை காவல்துறை தாக்கியது. இச்சம்பவத்தை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.என்.அனிபா மற்றும் சங்க நிர்வாகிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஒரு மாதம் கடந்த நிலையில் 18.11.2025 அன்று அதி காலை 3.30 மணியளவில் கிரிமினல் குற்ற வாளிகளை போல், அவர்களை கைது செய்து உள்ளது காவல்துறை. சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.என்.அனிபா மற்றும் 6 தோழர்கள் மீது 7 பிரிவுகளில் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிணையில் வர இயலாத வகையிலான வழக்கு களைப் பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளது. திருவாரூர் மாவட்ட காவல் துறை யின் தொழிலாளர் மற்றும் சிஐடியு விரோத அராஜக நடவடிக்கையை சிஐடியு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் தமிழ்நாடு முழுவதும் கண்டன இயக்கம் நடத்த அறைகூவல் விடுத் துள்ளது. இந்த கண்டன இயக்கத்தில் சிஐடியு வுடன் இணைக்கப்பட்ட அனைத்து தொழிற் சங்க தொழிலாளர்களும் பெரும் திரளாக பங் கெடுத்து காவல்துறையின் அராஜகத்தை கண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. மாநில காவல் துறை, தொழிலாளர்கள் மீது வன்மமான முறையில் நடந்துகொள்வதை கைவிட வேண்டும். நவ.17 அன்று சாம்சங் தொழிலாளர்கள் சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர் இ.முத்துக்குமார் தலை மையில் மாவட்ட ஆட்சியரிடம் நடைபயண பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். அதேபோல் நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சிஐடியு மாவட்ட மாநாடு மற்றும் போராட்ட நிகழ்வுகளின் போது காவல் துறை அனுமதி வழங்கி பின்னர் திடீரென ரத்து செய்துள்ளது. இதை நேரிடையாக தொழிற் சங்க தலைவர்களிடம் வழங்காமலும், போன் மூலம் தகவல் தெரிவிக்காமலும், இரவு 11 மணியளவில் சிஐடியு அலுவலக கதவில் அனுமதி மறுக்கப்பட்டதாக ஒரு அறிவிப்பை ஒட்டிச் சென்றுள்ளனர். இது ஜனநாயக செயல் பாடுகளுக்கு எதிரானது. தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதை அனு மதிக்காதது தொழிலாளர் விரோதப் போக்கா கும். மேற்படி மாவட்டங்களில் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது. எனவே, மாநில உள்துறை நிர்வாகம், தொழிலாளர்கள் ஜனநா யக ரீதியில் நடத்தும் போராட்டங்களுக்கு அனு மதி மறுப்பதை கைவிட வேண்டும் என காவல் துறைக்கு அறிவுறுத்தி தொழிலாளர் போராட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என சிஐடியு மாநிலக் குழு கேட்டுக் கொள் கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
