கல்விக்கு முட்டுக்கட்டை போடும் மாவட்ட நிர்வாகம்! பன்னியாண்டி இன மக்களுக்கு சாதிச் சான்று கேட்டு போராட்டம்
5 Feb 2026, 3:40 pm

கல்விக்கு முட்டுக்கட்டை போடும் மாவட்ட நிர்வாகம்! பன்னியாண்டி இன மக்களுக்கு சாதிச் சான்று கேட்டு போராட்டம்

திருவண்ணாமலை, பிப். 5- திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பன்னியாண்டி இன மக்களுக்குச் சாதிச் சான்று வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு பன்னியாண்டி கள் சங்கம் ஆகியவை சார்பில் திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்னி யாண்டி மக்கள் வசித்து வருகின்றனர். ஏழ்மை நிலையில் வசித்து வரும் பன்னியாண்டி இம்மக்களின் குழந்தைகள் இப்போதுதான் முதல் தலைமுறையாகக் கல்லூரிப் படிப்புக்கு அடி எடுத்து வைத்துள்ள னர். இந்த மக்களுக்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணா மலை மாவட்ட நிர்வாகம் அம்மக்க ளுக்கு சாதிச்சான்று வழங்கி வந்தது. ஆனால், சில ஆண்டுகளாகப் பன்னி யாண்டி இன மக்களுக்குச் சாதிச் சான்று வழங்குவது நிறுத்தப் பட்டுள்ளது. சாதிச் சான்று வழங்க வேண்டும் என சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருவண்ணா மலை மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. திருவண்ணா மலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடந்த ஆண்டு இரண்டு நாட்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராடிய வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் பன்னியாண்டி சாதிச் சான்று வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை அவர்களுக்கு சாதிச்சான்று வழங்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றுள்ள மாணவ, மாணவிகள் கல்வி பயில முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற முதுமொழி கல்வியின் அவசியத்தை உணர்த்துகிறது. ஆனால் பட்டி யலின பன்னியாண்டி மாணவர்களின் கல்விக்குத் திரு வண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. சாதிச் சான்று இல்லாததால், கல்லூரியில் சேர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி என்பவர் தற்கொலை செய்து கொண்ட கொடூரம் நிகழ்ந்த பின்னரும் கூட, மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் கல்வியும், உயிரும் பறிபோகும் ஆபத்தை இதுவரை உணரவில்லை. இந்நிலையில், வியாழனன்று (பிப். 5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பன்னியாண்டி கள் சாதிச்சான்று வழங்கக் கோரி முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் மா. கௌதம்முத்து தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் பங்கேற்று உரை யாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், தமிழ்நாடு பன்னியாண்டி கள் சங்கம் மாநில ஒருங்கி ணைப்பாளர் டி.ஜி. சம்பத், மாவட்டச் செயலாளர் ப. செல்வன், செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், தீஒமு மாவட்டச் செயலாளர் எஸ். ராம தாஸ், மாவட்டப் பொருளாளர் சி.குபேந்திரன், துணைச் செயலாளர் எஸ். அபிராமன், செயற்குழு உறுப்பி னர்கள் கே. வாசுகி, நா. சேகரன், ஏ. லட்சுமணன், நிர்வாகிகள் கே.கே. வெங்கடேசன், குமரன், அப்துல் காதர், பன்னீர், பி. சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே சாதிச் சான்று வழங்கப்பட்டி ருப்பின், அதன் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு விண்ணப்பித்துள்ள வர்களுக்கு 10 தினங்களுக்குள் சாதிச் சான்று வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பறிபோகும் பிள்ளைகளின் கல்வி கண்ணீர் வடித்த பெற்றோர்!

இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் - இந்திரா தம்பதி கூறுகையில், தங்களுடைய மகன்கள், நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உத்தர குமார் என்ற மகனும், நல்லவன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் விமலநாதன் என்ற மகனும் படித்து வருகின்றனர். இவர்களுக்குச் சாதிச் சான்று இல்லாததால் கல்வியைத் தொடர முடியாமல் தவித்து வருவதாகக் கண்ணீருடன் தெரிவித்தனர். இதேபோல் திருவண்ணாமலை போளூர் சாலை மாந்தோப்பு பகுதியிலிருந்து வருகை தந்த ஏழுமலை குடும்பத்தினர், தங்கள் மகன் போளூர் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வருவதாகவும், சாதிச் சான்று இல்லாததால் அவனுடைய கல்வி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.