தேசிய தேர்வு முகமையை கலைப்பதே ஒரே தீர்வு!
20 Aug 2026, 9:46 pm

தேசிய தேர்வு முகமையை கலைப்பதே ஒரே தீர்வு!

நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக்கல்விக் கனவைச் சீர்குலைத்து வரும்தேசிய தேர்வு முகமையின் (NTA) செயல்பாடுகள்மற்றும் நீட் தேர்வு முறைகள் குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்விகள் தற்போதைய தேர்வு முறையின் ஆணிவேரையே அசைத்து பார்த்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும்வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் எனத் தொடர்கதையாகிவிட்ட இந்த மோசடிகளைத் தடுத்து நிறுத்த, அவ்வப்போது புதிய கமிட்டிகளை அமைப்பதும் பணிக்குழுக்களை உருவாக்குவதும் எந்த மாற்றத்தையும்ஏற்படுத்தாது என்பதை உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்வு முகமைகளில் சீர்திருத்தம் என்ற பெயரில் உயர் அதிகாரிகளை மாற்றுவதும், புதியகுழுக்களை அமைப்பதும் தற்காலிகப் பூச்சுவேலைகளேயன்றி நிரந்தரத் தீர்வு ஆகாது. மாணவர்களின் வாழ்க்கையோடும் எதிர்காலத்தோடும் விளையாடும் தேசிய தேர்வு முகமைஅமைப்பு தனது நம்பகத்தன்மையை முழுமையாக இழந்துவிட்டது. ஒன்றிய அரசு எவ்வளவுமுயன்றாலும், இதன் கட்டமைப்புத் தோல்விகளை மறைக்க முடியாது. ஒவ்வொரு தேர்வின் போதும் புதிய சவால்களும் முறைகேடுகளும் அரங்கேறும் சூழலில், முறையான நிறுவன கட்டமைப்பையோ அல்லது வெளிப்படைத்தன்மையையோ இந்த முகமையால் வழங்க முடியவில்லை.

ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவைச் சுக்குநூறாக உடைக்கும் நீட் தேர்வு முறையானது மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் உள்ளது.

ஒட்டுமொத்த கல்வித்துறையையும் ஒருசிலகார்ப்பரேட் பயிற்சி மையங்களின் வணிகப் பொருட்களாக மாற்றிவிட்ட இந்தத் தேர்வு முறையால் சமூக நீதியும் பறிபோயுள்ளது. வினாத்தாள்கசிவுகள் மற்றும் முறைகேடுகள் மூலம் மாணவர்களின் உழைப்புச் சுரண்டப்படுவதை எந்தச் சட்டத்தாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

தேசிய தேர்வு முகமையின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், தற்காலிக சீர்திருத்தங்கள் மூலம் இதனைச் சரிசெய்ய முடியாது என்று உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளதை ஒன்றிய அரசு உணர வேண்டும். அமைப்பு ரீதியான சீரழிவுகளைச் சந்தித்து வரும் இந்த முகமையை மேலும் அனுமதிப்பது நாட்டின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்திற்கும் இழைக்கப்படும் மிகப் பெரும் துரோகமாகும்.

எனவே, பெயரளவிலான சீர்திருத்தங்களை நாடகமாடுவதை விடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொருட்டுத் தேசியதேர்வு முகமையை உடனடியாகக் கலைக்க வேண்டும். அத்துடன், எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்கும் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு, மாநில அரசுகளே தங்கள் கல்வி முறையின்படி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கஅனுமதிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.