தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜெயித்த பிறகு அநியாயமாக விட்டுட்டு போயிட்டாங்களே! வாக்காளர்களின் ஆதங்கமும், தொகுதி நிலவரமும்!

4 Oct 2026, 2:44 pm
ஜெயித்த பிறகு அநியாயமாக விட்டுட்டு போயிட்டாங்களே! வாக்காளர்களின் ஆதங்கமும், தொகுதி நிலவரமும்!

ஜெயித்த பிறகு அநியாயமாக விட்டுட்டு போயிட்டாங்களே! வாக்காளர்களின் ஆதங்கமும், தொகுதி நிலவரமும்!

தாராபுரம் தொகுதியின் புல்லாயிபாளையம், இச்சிப்பட்டி, நொச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நமது நிருபர் மேற்கொண்ட கள ஆய்வில், இடைத்தேர்தல் குறித்த மக்களின் கலவையானகருத்துகளும் ஆழமான ஆதங்கங்களும் வெளிப்பட்டன.கோவில் திண்ணைகளிலும், மளிகைக் கடைகளிலும் கூடும் வாக்காளர்களிடையே தேர்தல் களம் குறித்த காரசார விவாதங்கள் நடைபெறுகின்றன. ”ஜெயித்த பிறகு அநியாயமாக விட்டுட்டுபோயிட்டாங்களே” என்ற அதிருப்தியும் அனுதாபமும் ஒருபக்கம் அதிமுக ஆதரவாளர்களிடம் வெளிப்படுகிறது. அதேவேளையில், ”அதிமுக-திமுக கூட்டணியைஏற்க முடியாமல் தான் ராஜினாமா செய்தார்” என தவெக வேட்பாளருக்கு ஆதரவாக பேசும் குரல்களும் கேட்கின்றன. இருப்பினும், ”அதிமுக ஓட்டை தவெக பிரிப்பதால் திமுகவெற்றி பெற வாய்ப்புள்ளது” என்றும், ”மதியத்திற்கு மேல் பிரச்சாரத்திற்கு செல்பவர்களுக்கு ரூ.200-ம், உணவும்வழங்கப்படுகிறது” என்றும் கிராமப்புற வாக்காளர்கள் வெளிப்படையாக தெரிவிக்கின்றனர்.

தீராத தண்ணீர் பஞ்சமும்... முடங்கிய போக்குவரத்தும்

ஸ்ரீகவியரசன் போன்ற இளைஞர்கள் பேசுகையில், இப்பகுதியில் விசைத்தறி மற்றும் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், 4 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் அவலநிலை நீடிப்பதாககூறினர். நொச்சிபாளையம் பகுதியில் 67 வயதான காவலாளி ஒருவர் கூறுகையில், ”தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படாமல் செல்வதால் காங்கயம் சென்று வேறு பேருந்து மாறமுடிவதில்லை. நல்லிமரத்தூரிலிருந்து 24 மணி நேரமும் வந்த தண்ணீரையும் அடைத்துவிட்டு இப்போது வாரத்திற்கு ஒருநாள் தான் விடுகிறார்கள். பல வருடங்களாக எந்த மாற்றமும் நடக்கவில்லை, எளியவனுக்கு ஒரு நியாயம் வலியவனுக்கு ஒரு நியாயம்” என விரக்தியுடன் தெரிவித்தார்.விவசாய பெண் தொழிலாளர்கள் கூறுகையில், ”யார் ஜெயிச்சாலும் நாங்கரூ.300 கூலிக்கு வேலைக்குப் போனால் தான் பொழப்பு ஓடும். ஓட்டுப்போடலீவு விட்டா அரசு சம்பளமா தரப்போகுது?” என தங்களின் அன்றாட வாழ்வாதார உரிமையை கேள்வியெழுப்பினர். ஆசிரியர் கிஷோர் கூறுகையில், ”ஜெயித்த உடனே ராஜினாமா செய்தது தவறான முன்னுதாரணம். தற்காலிக இலவசங்களை வழங்கி மக்களைகவர்வதை விட்டுவிட்டு, ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் தொலைநோக்குதிட்டங்களையும், கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் அரசு உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.ராஜினாமா அரசியல் கொடுத்த ஏமாற்றம், 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வரும் குடிநீர், போதிய பேருந்து வசதியின்மைஎன மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு நடுவே வாழ்ந்து வரும் சூழலில், மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் உண்மையானமக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதில் தாராபுரம் மக்கள் தீவிர சிந்தனையில் உள்ளனர்!

-சக்திவேல்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.