தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

24 Mar 2026, 3:23 pm
சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
<p><strong>சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு</strong></p> <p>ஈரோடு, மார்ச் 24- ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப் பட்டன. தமிழ்நாட்டில் ஏப்.23 ஆம் தேதியன்று சட்ட மன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள் ளது. இதனையொட்டி, வாக்குச்சாவடிக ளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் முதற்கட்டமாக சுழற்சி முறையில் ஒதுக் கீடு செய்யும் பணி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சிய ருமான ச.கந்தசாமி தலைமை வகித்தார். &nbsp;ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் தொகுதிகளுக்காக மொத்தம் 2,852 கட்டுப் பாட்டு இயந்திரங்கள், 2,852 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 3,089 விவிபேட் கருவி கள் ஒதுக்கப்பட்டன. நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளான ராசிபுரம், சேந்தமங்க லம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங் கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதி களில் 720 வாக்குபதுவு மையங்களில் 1780 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இந்நிலையில் 6 தொகுதி தேர்தல் பணிக்காக 5,613 வாக்குப்பதிவு இயந்திரங் கள், 2241 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2360 விவிபேட் இயந்திரங்கள் என மொத்தம் 10,214 இயந்திரங்கள் நாமக்கல்லில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட் டிருந்தன. இவைகளை பிரித்து 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பும் பணி நடை பெற்று வருகிறது. இதில் மாவட்ட தேர்தல் &nbsp;அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்கா மூர்த்தி, 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக் குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக் கும் பணிகளை பார்வையிட்டார். கோவை கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் தேவையான வாக் குப்பதிவு இயந்திரங்கள், பலத்த பாதுகாப்பு டன் அந்தந்த தொகுதிகளுக்கு செவ்வா யன்று அனுப்பி வைக்கப்பட்டன. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்குச் சாவடி கிடங்கு அமைந்துள்ளது. இங்கிருந்து மாவட்டத்தின் 10 தொகுதிகளில் உள்ள 3563 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 4071 மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இந்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சி யருமான பவன்குமார் கரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவிநாசி அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் வாக் குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக் குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாயன்று அரசு கல் லூரிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர், அரசி யல் கட்சியினர் முன்னிலையில் இந்த இயந்தி ரங்கள் அறைகளுக்குள் வைக்கப்பட்டு, தேர் தல் நடத்தும் அலுவலர்கள் பூட்டி சீல் வைத் தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.