முந்தய பக்கம்

ஒப்பந்த தொழிலாளர்களை உரிமையற்றவர்களாக்கும்

7 Feb 2026, 5:37 pm
ஒப்பந்த தொழிலாளர்களை உரிமையற்றவர்களாக்கும்
<p>ஒப்பந்த தொழிலாளர்களை உரிமையற்றவர்களாக்கும் புதிய சட்ட தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.12ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி சிறப்புக் கருத்தரங்கம் திருவொற்றியூரில் உள்ள எண்ணூர் பவுண்ட்ரிஸ் தொழிற்சங்க மண்டபத்தில் எச்.சதீஷ் தலைமையில் சனிக்கிழமை (பிப். 7) நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாரன், துணை பொதுச்செயலாளர் வி.குமார், வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், கே.விஜயன் (ஒப்பந்த தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு), டிஆர்இயூ செயல் தலைவர் அ.ஜானகிராமன், மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி, சீனிவாசன் (என்.எல்.சி), பா.ராஜாராமன் (ரயில்வே ஒப்பந்த தொழிலாளர் சங்கம்), மாவட்டச் செயலாளர்கள் எஸ்.கே.முருகேசன், பகத்சிங் தாஸ், ஏ.ஜி.சந்தானம், ஏ.முருகானந்தம், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், நிர்வாகிகள் ஜி.விநாயகமூர்த்தி, ஜி.பிரபாகரன், ஜி.சலீல்குமார் ஆகியோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram