தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தென்னை மரங்களை தாக்கும் நோய்கள்: இயற்கை முறையில் மருந்து

20 Dec 2025, 3:38 pm
தென்னை மரங்களை தாக்கும் நோய்கள்: இயற்கை முறையில் மருந்து
<p>நாமக்கல், டிச.20- தென்னை மரங்களை தாக்கும் &nbsp;நோய்களுக்கும் இயற்கை முறை யில் மருந்து தெளிக்கும் முறை &nbsp;குறித்து செயல் முறை விளக்கத்தை &nbsp;ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக் கணக்கில் தென்னை விவசாயம் உள்ளது. இந்நிலையில், தென்னை &nbsp;விவசாயத்தையே விட்டுவிடும் சூழ லுக்கு விவசாயிகள் தள்ளப்படும் வகையில், நோய் தாக்குதல்கள் ஏற்பட்டு குருத்து காய்தல், காய்கள் &nbsp;உதிர்தல், போன்ற பல்வேறு தாக்கு தல்களுக்கு ஆளாவதால் தென்னை மரங்களை வெட்டி சாய்க் கும் நிலையில் விவசாயிகள் உள்ள னர். இதனை களைய பல்வேறு நட வடிக்கைகளை வேளாண்மை துறை எடுத்து வந்த போதிலும் அனைத்தும் ரசாயன பூச்சி மருந்து களாகவே இருப்பதால் முழுமை யாக கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் ரசாயன மருந்துகளை பயன்படுத்த அச்சப்படும் விவ சாயிகள் தங்களுக்கு மாற்று வழி &nbsp;கிடைக்காதா என நினைத்து வந்த னர். இந்நிலையில், ஈரோடு கருக் கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த &nbsp;தேவராஜ் என்பவர் முழு ஆய்வு &nbsp;செய்து இயற்கை உரம் ஒன்றை தயாரித்து இருகின்றார். இதன் மூலம் பல விவசாயிகள் பலன ைந்து வருவதாகவும், அவர்கள் &nbsp;திருச்செங்கோடு தென்னை விவ சாயிகளுக்கு தெரிவித்ததை &nbsp;அடுத்து, இதற்கான செயல்முறை &nbsp;விளக்கத்தை செய்து காண்பிக்கும் படி பகுதி விவசாயிகளில் ஒருவ ரான நடேசன் என்பவர் கேட்டுக் &nbsp;கொண்டார். அதன் பேரில் அவரது தோட்டத்தில் உள்ள தென்னை &nbsp;மரங்களை தாக்கியுள்ள நோய்க ளுக்கு மருந்து அடிக்கும் வகையில் செயல்முறை விளக்கத்தை ஏற் பாடு செய்து இருந்தார். இதனை &nbsp;திருச்செங்கோடு சட்டமன்ற உறுப் பினர் ஈஸ்வரன், திருச்செங்கோடு தோட்டக்கலைத்துறை உதவி &nbsp;இயக்குனர் சுகன்யா, தோட்டக் கலைத்துறை அலுவலர் பூர்ணிமா, &nbsp;ஆகியோருடன் நடேசன் நிலத்தில் நடந்த செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டு, இந்த மருந்து தெளிப்பதால் ஏற்படும் பலன்கள்! என்னென்ன மருந்துகள் கலக்கப் படுகிறது?</p> <p>இதனால் நிரந்தரமாக காண்டாமிருக வண்டு, கள்ளிப் பூச்சி, வெள்ளை ஈ ஆகியவற்றை தடுக்க முடியுமா என்பது குறித்து கேட்டறிந்தனர் மேலும் இந்த மருந்து தென் னைக்கு மட்டும் தானா? மற்ற பல &nbsp;மரங்கள் பூச்செடிகள் கீரைகள் &nbsp;போன்றவற்றுக்கு பயன்படுத்த லாமா என்பது குறித்தும், கிரண் &nbsp;ஆர்கானிக் பெர்டிலைசர் நிறுவனத் தின் உரிமையாளரும் ஆய்வாள ருமான தேவராஜனிடம் கேட்டறிந்த னர். இதுகுறித்து தேவராஜன் கூறு கையில், எந்த வித ரசாயனமும் கலைக்காமல் மாட்டுச்சாணம், கோமியம் மற்றும் பாக்டீரியாக் களை மட்டுமே பயன்படுத்தி, வேப் பெண்ணெய் உள்ளிட்ட சில எண் ணெய்களை பயன்படுத்தி இந்த &nbsp;மருந்தை உருவாக்கி தருகிறேன். ஒரு மரத்திற்கு ஒரு லிட்டர் என நீர் &nbsp;பாய்ச்சும் போது மரத்தின் வேர் பகுதியில் தொடர்ந்து மூன்று மாதங் களுக்கு ஊட்டி வந்தால் அனைத்து &nbsp;நோய்களையும் கட்டுப்படுத்த முடி யும். பக்கத்தில் உள்ள தோட்டத் துக் காரர்களும் இதே போல் மருந்த டித்தால் நோய் பரவாது. பாக்டீரி யாக்களை எண்ணெயுடன் சேர்ந்து பயன்படுத்துவதால் பூச்சிகளை அழிக்க இந்த பாக்டீரியாக்கள் உதவும். ரசாயனம் இல்லாத இந்த உரம் தென்னையை பாது காப்பதோடு நிலத்தின் தன்மையை யும் பாதுகாக்கும் என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.