தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உடுமலையில் கல்லாபுரத்தில் வீர ராசேந்திரன் காலத்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு

18 Mar 2026, 3:34 pm
உடுமலையில் கல்லாபுரத்தில் வீர ராசேந்திரன் காலத்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு
<p><strong>உடுமலையில் கல்லாபுரத்தில் வீர ராசேந்திரன் காலத்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு</strong></p> <p>உடுமலை, மார்ச் 18- கல்லாபுரம் அடுத்த கோபாலபுரம் &nbsp;காட்டுப்பகுதியில் 12 ஆம் நூற்றாண்டில் &nbsp;வடகொங்கு தென்கொங்கு என இரண் டையும் ஆட்சி செய்த வீரராசேந்திரன் காலத்தைய கல்வெட்டை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆவ ணப்படுத்தினர். &nbsp;இந்தக் கல்வெட்டில் ஸ்வஸ்ஸ்ரீ &nbsp;வீரரா சேந்திர &nbsp;தெவற்கு யாண்டு மங்கலத்து &nbsp;மலையாட்டி &nbsp;சாத்தன் ஆப என்று எழு தப்பட்டுள்ளது. &nbsp;இதன் முழுமையான கல்வெட்டு கிடைக்கவில்லை. இதுகு றித்து தொல்லியல் ஆய்வாளர் மூர்த் தீஸ்வரி கூறுவதாவது : &nbsp;இந்த கல்வெட்டு &nbsp; வீரராசேந்திரன் என்றும், தேவற்கு என் றும், &nbsp;மங்கலத்து மலையாட்டி &nbsp;என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன வெனில், நமது தென்கொங்கு நாட்டுப் &nbsp;பகுதி சேர, சோழ, பாண்டியர் ஆட்சி &nbsp;செய்தமைக்கான பல்வேறு கல்வெட்டு கள் ஆங்காங்கே கிடைத்துள்ளன. அதனை உறுதி செய்யும் வகையில் &nbsp;தான் இந்த கல்வெட்டும் அமைந்துள் ளது. ஏற்கனவே உடுக்கம்பாளையம் பகுதியில் பாண்டியர் பெயர் பொறித்த கல்வெட்டும், &nbsp;கண்ணாடிப்புத்தூரின் பழைய பெயர் வீரபாண்டி சதுர்வேதி மங்கலம் எனும் பழங்காலப் பெயரும் &nbsp;பாண்டியர்கள் ஆட்சி செய்தமைக்கான சான்றுகளாக நாம் கொள்ளலாம். அதே போல் பதிற்றுப்பத்தில் &nbsp;சேரன் &nbsp;செங்குட்டுவனின் கொடி வழி உறவுகள் &nbsp;இங்கு வந்து அயிரை மலையில் வழி பட்டமைக்கான இலக்கியச்சான்றுக ளும் உள்ளது. அதே போல் &nbsp;விக்கிரம சோழன் என்பவன் ஆட்சி செய்தமைக் கான சான்று தான் இன்றைய கல்லா புரம். கல்லாபுரத்தில் பழைய பெயர் விக் கிரம சோழ நல்லூர். கி.பி.1206 முதல் 1250 &nbsp;வரைக்கும் வீரராசேந்திரன் ஆட்சி செய் தமைக்கான சான்றுகள் கடத்தூர் மருதீ சர் கோயில் கல்வெட்டில் ஏற்கனவே உள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வீரராசேந்திரன் காலத் தைய கல்வெட்டு கிடைத்துள்ளது. &nbsp; &nbsp;இப்போது கிடைத்திருக்கும் இந்த &nbsp;வீரராசேந்திரன் காலத்து கல்வெட்டு &nbsp;வீரராசேந்திரன் ஆட்சி மாண்பினையும், &nbsp;வடகொங்கு தென்கொங்கு என இரண்டு கொங்கு நாட்டையும் ஆட்சி செய்தமைக்கான சான்றுகளாக இத னைக்கருதலாம் என தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி கூறுனார். &nbsp;இந்த ஆய்வுப்பணியில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் அருள்செல்வன், வி.கே.சிவகுமார் மற் றும் வீரய்யன், பல்லடம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜெய்சிங் ஆகியோரும் ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.