மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டை கண்டுபிடிப்பு
7 Mar 2026, 2:36 pm
<p><strong>மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டை கண்டுபிடிப்பு</strong></p>
<p>உடுமலை, மார்ச் 7- உடுமலை அருகே கல்லாபுரம் பகுதி யில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந் தைய பெரிய அளவிலான கற்திட் டையை உடுமலை வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டுபிடித்து ஆவணப்ப டுத்தியுள்ளனர். கல்லாபுரம் அமராவதி ஆற்றின் கரையின் தெற்குப் பகுதியில், வயல் வெளிகளுக்கு மத்தியில் இந்த பெரிய அளவிலான கற்திட்டை இருப்பதை உடுமலை வரலாற்று ஆய்வு மையத் தினர் கண்டறிந்தனர். இது குறித்து தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி கூறுகையில், கரைவளி நாடான கல்லா புரத்தில் பெரிய அளவிலான கற்திட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் இருந் தது. இதற்கு முன்பு இந்தக் கரைவ ளிப் பகுதியில் வேறு எங்கும் இது போன்ற கற்திட்டை கிடைக்கப்பெற வில்லை. இது ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பெருங்கற் காலத் திட்டை அமைப்பாகும். இது ஒன் றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட பாறை களை கொண்டிருந்த நிலையில், தற் போது சிதிலமடைந்து காணப்படுகி றது. இந்த கற்திட்டை அமைந்திருக் கும் இடம் ‘பாண்டியன் திட்டு’ என உள் ளூரில் அழைக்கப்படுகிறது. இதே பகு தியில் பல இடங்கள் பாண்டியன் பெய ரில் அமைந்த மலைக் கரடுகள் உள்ளன. மேலும், மலைப்பகுதியில் ‘மடம்’ என்ற பெயரில் இடங்கள் இருப்பதும் கள ஆய் வில் தெரியவந்துள்ளது. அமராவதி மலைப்பகுதியில் பாண்டியராஜா மடம், கொற்றவன் கரடு, பாண்டியன் திட்டு போன்ற பெயர்களும் உள்ளன. இந்த கற்திட்டையில் மூன்று குத் துக்கற்களும், 12 அடிக்கு 8 அடி அளவி லான ஒரே பாறைக்கல்லால் ஆன மூடு கல்லும் உள்ளன. மூடுகல்லின் உயரம் 4 அடி 10 அங்குலமாகும். மேலும், 10 அடிக்கு 4 அடி, 6 அடிக்கு 3 அடி, 6 அடிக்கு 4 அடி என்ற அளவில் மொத்தம் 8 பாறைக்கற்கள் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்துகிடக்கின்றன. இது வரலாற்றுச் சின்னம் என்பது தெரியாமல் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இதனை சிதிலமடையச் செய்தது கள ஆய்வில் தெரியவந்தது. அமராவதி கரைவளிப் பகுதியில் அமைந்த கல்லா புரம் சிற்றூர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என கல்வெட்டுகள் வழி உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அதற்கு முன்பாகவே அமராவதி நதிக் கரையில் மக்கள் வசித்தமைக்கான நாக ரிகங்கள் இருந்துள்ளதை உடுமலை வர லாற்று ஆய்வு மையத்தின் சார்பில் தொல்லியல் சின்னங்கள் வழி ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர். பெருங்கற்கால கற்திட்டை கிடைத்திருப்பதன் மூலம், அமராவதி கரைவளிப் பகுதி மூவாயிரம் ஆண்டு களுக்கும் முற்பட்டது என்பதும், சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட ஆன்பொ ருநை குறித்த பாடல்களும் இதற்கு சான்றாக திகழ்வதாகவும் தெரி வித்தார். இந்த கள ஆய்வில் பேராசிரிய ரும் ஆய்வாளருமான ஜெய்சிங், உடு மலை வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் வி.கே. சிவகுமார், அருள்செல் வன் மற்றும் வீரய்யன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
