ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு
28 Dec 2025, 5:05 pm
<p><strong>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு</strong></p>
<p>தருமபுரி, டிச.28- ஒகேனக்கலில் சுற்றுலாப் பய ணிகள் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரி ழப்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தமிழ்நாடு பேரி டர் மீட்புப்படையினர் நேரில் ஆய்வு செய்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரத்தை அடுத்துள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில், அடிக்கடி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு கள் ஏற்பட்டு வருகின்றன. அதனை தடுக்கும் விதமாக தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையினர் ஒகேனக் கல் காவல் நிலையத்தில் ஞாயி றன்று ஆலோசனை மேற்கொண்ட னர். பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், தேசிய பேரிடர் மீட்புப்படை துணை கமாண்டன்ட் ஸ்ரீவைத்தியலிங்கம், ஆய்வாளர் விவேக்குமார் ஸ்ரீவாஸ்தவ், தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை உதவி கண்காணிப் பாளர் கோவிந்தராஜ் மற்றும் காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதி காரிகள் மற்றும் பரிசல் துறை ஒப் பந்ததாரர்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். பரிசல் சவாரியின் போது ஏற்ப டும் விபத்துகள், பரிசல் ஓட்டிகள் சுழல் மிகுந்த இடங்களில் பரிசலை இயக்கும்போது ஏற்படும் விபத்து கள் மற்றும் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் காவிரி ஆற்றில் குளிக்கக் கூடிய சுற்றுலாப் பயணிகள் ஆபத் தான இடங்களுக்கு சென்று நீரில் மூழ்கி உயிரிழக்கும் இடங்கள், பரி சல் கட்டுமானம், அதன் உறுதித் தன்மை குறித்தும் கேட்டறிந்தனர். இதன்பின், சுற்றுலாப் பயணி கள் அடிக்கடி நீரில் மூழ்கி உயிரி ழக்கும் இடங்களான ஆலம்பாடி பரிசல் துறை, ஊட்டமலை பரிசல் துறை, முதலைப்பண்ணை எதிரே உள்ள காவிரி ஆறு, கோத்திகள் மணல் திட்டு உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்தனர். நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்க எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வு செய்தனர்.</p>
