நரிமணம் ஓ.என்.ஜி.சி. நிலையத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி
20 Feb 2026, 2:39 pm
<p><strong>நரிமணம் ஓ.என்.ஜி.சி. நிலையத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி</strong></p>
<p>நாகப்பட்டினம், பிப்.20- நரிமணம் ஒ.என்.ஜி.சி. எண்ணெய் எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் அவசர காலங்களில் விபத்து நேரிட்டால் தற்காத்துக் கொள்ளும் முறை மற்றும் பாதிப்புகளை தடுக்கும் முறை குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஓ.என்.ஜி.சி. சார்பில், பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், விபத்தின் 1 மற்றும் 1 ஆவது நிலையை கடந்து, பெரிய அளவிலான அபாயம் என்ற 3 ஆவது நிலைக்குச் சென்றுவிட்டால், நிறுவனத்தின் மற்ற பணி மையங்களின் உதவியை தாண்டி, உள்ளூர் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், அருகிலிருக்கும் ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்களில் இருந்து உதவிகோரி, அவர்களின் பரஸ்பர ஒத்துழைப்புடன் அவசர நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து சரிசெய்வது குறித்து, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினருடன் தமிழக அரசின் பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து செயல் விளக்கம் செய்து காட்டினர். காவேரி அசெட்டின் செயல் இயக்குநர் உத் பஸ்வான் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் சுதிஷ்குமார், காரைக்கால் பேரிடர் கட்டுப்பாட்டு அறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிகாட்ட, உற்பத்தி பிரிவு மேலாளர் கே.வி. இளங்கோ மற்றும் தலைமை பாதுகாப்பு துறை அதிகாரி கே. திருப்பதிவாசகர் ஆகியோர் தலைமையில், நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் அலுவலர் வி. பவணந்தி, மாவட்ட பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சக்ரவர்த்தி, மாவட்ட துணை கண்காணிப்பாளர் ரா. சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காட்டப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வருவாய்த் துறை, காவல்துறை, மருத்துவத் துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்று இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தங்களது பங்களிப்பை வழங்கினர். நரிமணம் GGS நிலைய பொறுப்பாளர் சந்தீப் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். பொது மேலாளர் பி.எம். சுரேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி.யின் பல்வேறு துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.</p>
