தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விபி ஜி ராம் ஜி வேலைத் திட்டம் சிறப்புப் பணிகள் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கும் 4 மணி நேர வேலை வழங்கக் கோரிக்கை

23 Jul 2026, 9:33 pm
விபி ஜி ராம் ஜி வேலைத் திட்டம் சிறப்புப் பணிகள் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கும் 4 மணி நேர வேலை வழங்கக் கோரிக்கை

விபி ஜி ராம் ஜி வேலைத் திட்டம் சிறப்புப் பணிகள் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கும் 4 மணி நேர வேலை வழங்கக் கோரிக்கை

சென்னை, ஜூலை 23- விபி ஜி ராம் ஜி வேலைத் திட்டத்தில் சிறப்புப் பணிகள் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு 8 மணி நேர வேலைக்கு மாற்றாக, 4 மணி நேர வேலை மட்டுமே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் (TARATDAC) தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்ற பிறகு, கடந்த ஜூன் 2 அன்று தலைமைச் செய லகத்தில் முதலமைச்சரைச் சந்தித்து மாற்று த்திறனாளிகளின் 14 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. இதில் விபி ஜி ராம் ஜி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் கடந்த ஜூலை 20 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வேலை கேட்டு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனையற்ற வேலை, 15 நாட்களுக்குள் தனித்துவ வேலை அட்டை மற்றும் மண் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலைக்கு முழு ஊதியம் போன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதைச் சங்கம் வரவேற்றுள்ளது. மனித உரிமை மீறல்- சங்கம் கண்டனம் அதேவேளையில், சிறப்புப் பணிகள் செய்யும் மாற்றுத்திறனாளிகள் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல் ஏற்புடையதல்ல என்று சங்கம் தெரிவித்துள்ளது.

பணித்தளங்களில், குறிப்பாகப் பெண் மாற்றுத்திறனாளிகளுக்குக் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், அவர்களை 8 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்துவது மனித உரிமை மீறலாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, சிறப்புப் பணிகள் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கும் 4 மணி நேர வேலை மட்டுமே வழங்க வேண்டும்; அல்லது முற்பகல் மற்றும் பிற்பகல் எனச் சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016-ன் படி 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் எனவும், ஒன்றிய அரசு நிதி குறைக்கும் பட்சத்தில் தமிழக அரசே சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து இதனைச் செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருவிழி மற்றும் கைரேகை பதிய இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று வழிமுறைகள் மூலம் வேலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் மற்றும் பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.