தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜூலை 1-இல் நாடு தழுவிய கருப்பு தினம் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தை மீட்க மாற்றுத் திறனாளிகள் போராட்ட அறிவிப்பு!

13 Jun 2026, 11:09 pm
ஜூலை 1-இல் நாடு தழுவிய கருப்பு தினம் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தை மீட்க மாற்றுத் திறனாளிகள் போராட்ட அறிவிப்பு!

ஜூலை 1-இல் நாடு தழுவிய கருப்பு தினம் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தை மீட்க மாற்றுத் திறனாளிகள் போராட்ட அறிவிப்பு!

சென்னை, ஜூன் 13 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை மீண்டும் சட்டப்பூர்வமாக்கி முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை (என்பிஆர்டி) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து சென்னையில் நடைபெற்ற அகில இந்திய நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு, அமைப்பின் செயல் தலைவர் எஸ். நம்புராஜன் மற்றும் பொதுச் செயலாளர் முரளிதரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை மீண்டும் சட்டப்பூர்வமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது அமைப்பு நாடு தழுவிய அளவில் போராட்டங்களைத் தீவிரப்படுத்தத் தீர்மானித்துள்ளது. குறிப்பாக, விபிஜி ராம்ஜி திட்டம் அமலுக்கு வரும் நாளான 2026 ஜூலை 1 அன்று, நாடு முழுவதும் உள்ள தேசிய மேடையுடன் இணைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் சார்பில் ‘கருப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படும். இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பார்கள். இந்த முக்கியக் கோரிக்கையை முன்வைத்து, நாடு முழுவதும் உள்ள பிற அமைப்புகளுடன் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த மக்கள் இயக்கத்தை உருவாக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

எங்களது அச்சமும் கவலையும்

விபிஜி ராம்ஜி திட்டம் நடைமுறைக்கு வந்தால், மாநில அரசுகளும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன் காரணமாக, தற்போது ஊரகப் பகுதிகளில் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பைப் பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள், தங்களுக்குக் கிடைத்து வரும் வேலைவாய்ப்புகளை முற்றிலுமாக இழக்கும் அபாயம் ஏற்படும் என்று தேசிய மேடை கருதுகிறது. எனவே, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய சூழலைத் தடுத்து நிறுத்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.