தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலை உறுதிச் சட்டத்தை ஒழிக்கும் புதிய சட்ட நகலை கிழித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

6 Jan 2026, 4:23 pm
வேலை உறுதிச் சட்டத்தை ஒழிக்கும் புதிய சட்ட நகலை கிழித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
<p><strong>நூறு நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் சட்ட நகலை கிழித்தெறிந்து மாற்றுத் திறனாளிகள் போராட்டம்</strong></p> <p>சேலம், ஜன 06- மகாத்மா காந்தி பெயரில் இருந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை சீர் குலைத்த மோடி அரசின் விபி ஜி &nbsp;ராம் ஜி சட்ட நகலைக் கிழித்தெறிந்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர் செவ்வா யன்று தமிழகம் தழுவிய போராட்டத் தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதுடன், கிராமப்புற ஏழை மக் களுக்கு மட்டுமின்றி, மாற்றுத் திறனாளிகளுக்கும் எதிரான பல்வேறு விதிமுறைகளை ஒன்றிய &nbsp;பாஜக அரசு விபி ஜி ராம் ஜி என பெயரை மாற்றியுள்ளது. மேலும், மாநில அரசிற்கு சுமையை ஏற்றுவ தற்காக திட்டத்தை மாற்றியுள்ளது. &nbsp;இந்த திட்டத்தை மொத்தமாக சீர் குலைக்கும் எண்ணத்தோடு ஒன் றிய பாஜக அரசு செயல்படுகிறது. கிராமப்புற ஏழைஎளிய உழைப் பாளி மக்களின் வயிற்றில் அடிக்கும் &nbsp;மோடி அரசின் சட்டத்தை கண்டித் தும், இந்த சட்ட நகலை கிழிக்கும் போராட்டத்தை தமிழ்நாடு மாற் றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங் கம் அறிவித்தது. இதன்படி செவ்வா யன்று சேலம் மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் நகல் கிழித் தெரியும் போராட்டம் நடைபெற் றது. காடையாம்பட்டியில் தாலுகா &nbsp;செயலாளர் கந்தசாமி தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம். குணசே கரன் பங்கேற்றார். ஓமலூரில் தாலுகா செயலாளர் சாவித்திரி தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில் மாவட்டத் தலைவர் அமலா &nbsp;ராணி பங்கேற்றார். மேட்டூரில் தாலுகா தலைவர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில் மாவட்டப் பொருளாளர் ஜான் பெர்னாண்டஸ் பங்கேற்றார். எடப்பாடியில் தாலுகா செயலாளர் உமா காந்த் தலைமையிலும், ஆத்தூ ரில் மாவட்ட இணை செயலாளர் அலகுவேல் தலைமையிலும், நங்க வள்ளி பகுதியில் நாகேந்திரன் &nbsp;தலைமையிலும், பெத்தநாயக்கன் பாளையம் பகுதியில் தலைவர் &nbsp;பாரதி தலைமையிலும் போராட்டங் கள் நடைபெற்றது. இதில், நிர்வாகள் &nbsp;கனகராஜ், ஹரி கிருஷ்ணன், &nbsp;பானுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்டம், பொள் ளாச்சியில் கே.மகாலிங்கம், பால சுப்பிரமணி, ஆனைமலையில் செல் வராஜ், சுல்தான்பேட்டை தாலுகா &nbsp;செஞ்சேரி மலையில் விஜயராகவன், &nbsp;மேட்டுப்பாளையம் தாலுகா கார மடையில் ஜெயந்தி ஆகியோர் &nbsp;தலைமை தாங்கினர். இதில் அகில &nbsp;இந்திய விவசாயத் தொழிலாளர் &nbsp;சங்க மாவட்டத் தலைவர் தி.ரவிச்சந் திரன், விவசாயிகள் சங்க மாவட்ட &nbsp;துணைத் தலைவர் ரவீந்திரன், &nbsp;சிஐடியு சாலை போக்குவரத்து கே. செல்வகுமார் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். &nbsp; ஈரோடு ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு, நகர உதவி தலைவர் வி. ராஜு தலைமை வகித்தார். மாவட் டப் பொருளாளர் சு.கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி பாளையம், திருச்செங்கோடு, கபி லர்மலை, பரமத்தி, மோகனூர் எரு மப்பட்டி, நாமகிரிப்பேட்டை வெண்ணந்தூர், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், கொல்லிமலை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு 100 நாள் வேலை சட் டத்தை மாற்றியதை கண்டித்து &nbsp;நகல் கிழிக்கும் போராட்டம் நடை பெற்றது.இப்போராட்டங்களில் சங்க மாவட்டத் தலைவர் ஏ.நாகேஸ் வரி, செயலாளர் எம்.ஆர்.முருகே சன், பொருளாளர் கே.அருண் குமார், மாவட்ட துணை தலைவர் கள், மாவட்டத் துணைச் செயலா ளர்கள் மற்றும் மாவட்ட குழு உறுப் பினர்கள், ஒன்றிய, தாலுகா நிர் வாகிகள், கிளை நிர்வாகிகள் என திரளாக கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு வட்டத் தலைவர் பழனி தலைமை வகித்தார். அரூரில் நடை பெற்ற போராட்டத்திற்கு வட்டத் தலைவர் கே. காந்தி தலைமை வகித்தார். பென்னாகரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் &nbsp;தலைவர் சாமுண்டீஸ்வரி தலைமை வகித்தார். &nbsp;இந்த போராட் டங்களில் மாவட்டச் செயலாளர் எம். மாரிமுத்து, தலைவர் ஜி. தமிழ் &nbsp;செல்வி, மாநிலக்குழு உறுப்பினர் கே. ஜி. கரூரான், மாவட்ட துணைத் தலைவர் பி. கே. மாரியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் கே. சுசிலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.