முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்: வேலூர், செங்கல்பட்டில் கைது

11 Nov 2025, 6:02 pm
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்: வேலூர், செங்கல்பட்டில் கைது
<p><strong>மாற்றுத்திறனாளிகள் போராட்டம்: வேலூர், செங்கல்பட்டில் கைது</strong></p> <p>மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திராவில் வழங்குவதைப் போன்று தமிழ்நாட்டிலும் மாத உதவித்தொகையை ₹6,000 முதல் ₹15,000 வரை உயர்த்தி வழங்கக் கோரியும், 100% பார்வை இழப்புள்ளோரை கடும் ஊனத்தில் சேர்க்க வலியுறுத்தியும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே. கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் கோபால ராஜேந்திரன் மற்றும் பொருளாளர் குருமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் எஸ். தாட்சாயணி தலைமையில் நடந்த போராட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர் ப.சு. பாரதி அண்ணா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் எம். வெள்ளிக்கண்ணன் தலைமையில் நடந்த போராட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram