பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் தின விழா
3 Dec 2025, 2:59 pm
<p><strong>பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் தின விழா</strong></p>
<p>தஞ்சாவூர்/பெரம்பலூர், டிச.3 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் வட்டார வள மையம் சார்பில், மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ராமலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பகல் நேர பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள் 15 பேரும், அருகாமைப் பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறன் மாணவர்கள் 10 பேரும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இசை நாற்காலி, கனியும் கரண்டியும், வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற, கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், பெரம்பலூர் கௌதம புத்தர் உயர்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/சார்பு நீதிபதி சரண்யா பேசினார். பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷாகுல் ஹமீது, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து பேசினார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தமிழ்பாக்கியா மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் ஆகியோர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் பேசினர். இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் தாளாளர் லில்லி வரவேற்றும், நன்றியுரையும் வழங்கினார்.</p>
