தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பிரச்சாரம்

3 Dec 2025, 2:59 pm
விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பிரச்சாரம்
<p><strong>விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பிரச்சாரம்</strong></p> <p>அவிநாசி, டிச.3 - அவிநாசி சுற்றுவட்டாரத்தில் பட்டா கேட்டு விண்ணப்பித்த அனை வருக்கும் பட்டா வழங்கக்கோரி &nbsp;நான்கு இடங்களில் தமிழ்நாடு &nbsp;அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான &nbsp;சங்கத்தினர் பிரச்சாரம் செய்தனர். வீட்டுமனை பட்டா கேட்டு விண் ணப்பித்த அனைவருக்கும் பட்டா &nbsp;வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி களுக்கு வழங்கி வரும் உதவித்தொ கையை உயர்த்தி வழங்க வேண்டும். &nbsp;மாத உதவித்தொகை கேட்டு பதிவு &nbsp;செய்தவர்களுக்கும், உபகரணங் கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக் கும் கால தாமதமின்றி உடனே வழங்க &nbsp;வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு &nbsp;அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான &nbsp;சங்கத்தினர் திருமுருகன் பூண்டி, அவிநாசி புதிய பேருந்து நிலையம், ஆட்டையாம்பாளையம், தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்தனர். அமைப்பின் ஒன்றியச் செயலா ளர் பாரூக் தலைமையில் நடை பெற்றது. இதில் கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் துணைத் தலைவர் &nbsp;த.ஜெயபால், ஒன்றிய தலைவர் சசி குமார், ஒன்றிய துணைச் செயலாளர் &nbsp;பன்னீர்செல்வம், ஒன்றியப் பொருளா ளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். இதில், ஒன்றிய துணைத் &nbsp;தலைவர் கருப்புசாமி, ஜோதி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தாராபுரம்: மாற்றுத்திறனாளிகள் அமைப்பு &nbsp;தினத்தை முன்னிட்டு தாராபுரம் சங்க &nbsp;அலுவலகத்தில் கொடியேற்று விழா &nbsp;நடைபெற்றது. இதில் சங்கத் தலை வர் முருகன் கொடி ஏற்றி வைத்தார். &nbsp;சங்கச் செயலாளர் சுரேஷ், துணைத் தலைவர் பாத்திமா, சிஐடியு மாவட் டத் துணைத் தலைவர் என்.கனகராஜ் &nbsp;உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் 15 வேலம்பாளையத் திற்கு உட்பட்ட அனுப்பர்பாளையத் தில், மாநில மாநாட்டு பிரச்சார இயக் கத்தின் ஒரு பகுதியாக பிரச்சாரம் &nbsp;செய்யப்பட்டது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர் கமலக்கண்ணன் தலைமையில், மாவட்டத் தலைவர் லோகநாதன் உரையாற்றினார். மாநி லச் செயலாளர் பா.ராஜேஷ் சிறப் புரை ஆற்றினார். &nbsp;உடுமலை நகராட்சி மற்றும் பேரூராட்சிக ளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அர சாணைப்படி கடைகள் ஒதுக்கீடு செய் யக் கோரி மடத்துக்குளம் நால்ரோடு &nbsp;பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகா தலைவர் கமலம் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி, மாவட்ட துணைத் &nbsp;தலைவர் மாலினி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் &nbsp;ஆர்.வி.வடிவேல், அனைத்து துறை &nbsp;ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் கரு ணாநிதி, விவசாயிகள் சங்கத்தின் &nbsp;வெள்ளியங்கிரி, மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் தாலுகா செயலாளர் &nbsp;அழகிரிசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.