வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பிரச்சாரம்
7 Dec 2025, 3:52 pm
<p><strong>வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பிரச்சாரம்</strong></p>
<p>தருமபுரி, டிச.7- வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி யில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் பிரச்சார இயக்கத்தில் ஈடு பட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திற னாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாநில மாநாடு, திருச்சியில் டிச.19, 20 ,21 ஆகிய தேதிகளில் நடைபெறவுள் ளது. இம்மாநாட்டின் கோரிக்கைகளை விளக்கும் வகையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் ஞாயிறன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் கே.ஜி.கரூரான் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாவட்டத் தலைவர் தமிழ் செல்வி, வட் டத் தலைவர் சாமுண்டீஸ்வரி, நிர்வாகி மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று எட்டிரம்பட்டி, மாங் கரை, கோடியூர், நூல அள்ளி, வண்ணாத்திப்பட்டி உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற் றது.</p>
