கண்ணில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
2 Dec 2025, 4:11 pm
<p><strong>கண்ணில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, டிச. 1, 2: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. கோரிக்கைகள் பொது பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளி களுக்கு 5% நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துதல். ஊனமுற்றோர் உரிமை களுக்கான பாதுகாப்பு சட்டம் 2016-ஐ முழுமையாக அமல்படுத்தக் கோருதல். கல்வியில் 5 சதவீதம், வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீடு சட்டச் சலுகையை அமலாக்கக் கோருதல். கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநிலக் குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர். ஆளவந்தார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழுப்புரத்தில் நகராட்சி திடலில் மாவட்டத் தலைவர் ஜி. ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநிலத் துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைவர் என். வைத்தியலிங்கம் தலைமையில் கண்களில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி. வேலு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
