தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத் திறனாளிகள் 2 ஆவது நாளாக போராட்டம்

11 Feb 2026, 5:52 pm
உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத் திறனாளிகள் 2 ஆவது நாளாக போராட்டம்
<p><strong>உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத் திறனாளிகள் 2 ஆவது நாளாக போராட்டம்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, பிப்.11 - வருவாய்த் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை யில் உதவி தொகை வழங்க கோரி மனு கொடுத்து தமிழ்நாடு முழுவதும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள &nbsp;ஆயிரக்கணக்கான மாற்றுத் திற னாளிகளுக்கு உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும். மாற்று &nbsp;திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் &nbsp;தொகையை ரூ.6000 ஆகவும், கடும் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.10000 ஆகவும், படுத்த படுக்கை யாக உள்ளவர்களுக்கு ரூ.15000 ஆகவும் உயர்த்தி வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்கள் சார்பில் இரண்டாம் நாளாக புத னன்று நீதிமன்றம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது. &nbsp;போராட்டத்திற்கு மாநகர் மாவட்டத் &nbsp;தலைவர் ரவிச்சந்திரன், புறநகர் மாவட்டத் தலைவர் ராஜேஷ் ஆகி யோர் தலைமை வகித்தனர். போராட் டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் பாபு, பொருளாளர் மாலதி, மாநில துணைச் செயலாளர் ரஜினிகாந்த், மாநிலக்குழு உறுப்பி னர் குமார், புறநகர் மாவட்ட துணைச் &nbsp;செயலாளர் சமுத்திரவள்ளி, பொரு ளாளர் சித்ரா, துணைத் தலைவர் ரவி ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பெரம்பலூர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் &nbsp;சார்பில் மாவட்டச் செயலாளர் ராஜ சேகர் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு &nbsp;சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. &nbsp;மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு &nbsp;அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தி னர் 2 ஆவது நாளாக புதனன்றும் மாவட்ட தலைவர் டி.கணேசன் தலை மையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். மாவட்டச் செயலாளர் மகா. புருஷோத், லெட்சுமி, சொக்க லிங்கம், ராஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். 300-க்கும் மேற்பட்ட &nbsp;மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை களை வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.