மாத உதவித்தொகையை ரூ. 6 ஆயிரமாக உயர்த்தக் கோரிக்கை மாற்றுத் திறனாளிகள் மறியல்; ஆயிரக்கணக்கானோர் கைது!
10 Feb 2026, 4:50 pm
<p><strong>மாத உதவித்தொகையை ரூ. 6 ஆயிரமாக உயர்த்தக் கோரிக்கை மாற்றுத் திறனாளிகள் மறியல்; ஆயிரக்கணக்கானோர் கைது!</strong></p>
<p>சென்னை, பிப். 10 - மாத உதவித்தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் செவ்வாயன்று (பிப்.10) மாநிலந் தழுவிய அளவில் மறியலில் ஈடுபட்டனர். இதில் 36 மாவட்டங்களில் 14 ஆயிரம் பேர் கலந்து கொண்டு கைதாகினர். தமிழ்நாடு அரசானது, 75 சதவிகிதம் வரை பாதிப்பு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 1500 ரூபா யும், அதற்கு மேற்பட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கி வருகிறது. ஆனால் ஆந்திரா வில் 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், பாண்டிச்சேரியில் 5 ஆயிரத்து 700 ரூபாய் வரையிலும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. எனவே, தமிழகத்தில் மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்; கடுமையான பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், படுத்த படுக்கை யாக உள்ளவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்க வேண்டும், ஏற்கெனவே, விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டம் தொடரும்! இதனொரு பகுதியாக சென்னையில் மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரகம் முன்பு நடை பெற்ற மறியலில் பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது சங்கத்தின் பொதுச் செய லாளர் பா. ஜான்சிராணி செய்தியா ளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில், “திமுக அரசு அமைந்ததும் எங்களது போராட்டத்தையடுத்து உதவித்தொகையை 500 ரூபாய் உயர்த்தியது. எனினும், இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஆந்திராவைப் போன்று குறைந்த பட்சம் 6 ஆயிரம் ரூபாயை உதவித் தொகையாக வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இந்த ஒற்றைக் கோரிக்கை நிறைவேறும் வரை மறியல் போராட்டம் தொட ரும்” என்றார். அலைக்கழித்த காவல்துறையினர்! இதனிடையே, மறியலில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் கைது செய்து, சுமார் 7 கி.மீ. தொலைவில் கோட்டூரில் உள்ள மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு போதிய கழிப்பிட வசதி இல்லை. முதல்மாடிக்கு ஏறிச் செல்லுமாறு காவல்துறையினர் கூறியதால், அனைவரும் மத்திய கைலாஷ் சிக்னல் சந்திப்பில் மீண்டும் மறிய லில் ஈடுபடவே, எழும்பூரில் உள்ள ராஜ ரத்தினம் மைதானத்திற்கு கொண்டு சென்றனர். இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி பேச்சுவார்த்தை நடத்த உள்ள தாக கூறி சங்கத் தலைவர்களை மட்டும் தலைமை செயலகத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர், பின்னர், பேச்சுவார்த்தை எதுவும் நடக்காத நிலையிலேயே, மீண்டும் ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டுவந்து விட்டனர். நிர்வாகிகள் உட்பட 700 பேர் கைது! இந்தப் போராட்டத்தில் ஊன முற்றோர் உரிமைக்கான தேசிய மேடை யின் தலைவர் எஸ். நம்புராஜன், மாநிலத் தலைவர் தோ. வில்சன், பொருளாளர் கே.ஆர். சக்ரவர்த்தி, மாநில துணைத்தலைவர் பாரதி அண்ணா, மாவட்ட நிர்வாகிகள் சுரேந்தர், எஸ். மனோன்மணி (மத்திய சென்னை), ஜெயச்சந்திரன், ராணி (வட சென்னை), கிருஷ்ணன், எம். குமார் (தென்சென்னை), எம். சரஸ்வதி எம்.சி. உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.'</p>
