முதலமைச்சரிடம் முறையிட சென்ற மாற்றுத்திறனாளிகள் மறியல், கைது
17 Feb 2026, 3:36 pm

முதலமைச்சரிடம் முறையிட சென்ற மாற்றுத்திறனாளிகள் மறியல், கைது

கோரிக்கைகள் ஏற்கப்படாததால் இரவிலும் தொடர்ந்த போராட்டம்

சென்னை, பிப்.17 - முதலமைச்சரிடம் முறையிட சென்ற மாற்றுத்திறனாளிகளை கைது செய்த காவல்துறையினர், பேருந்து களில் அழைத்து சென்று அலை கழித்தனர். ஆந்திர மாநிலத்தை போன்று மாதாந்திர உதவித்தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு 10 ஆயிரம் ரூபாய், படுத்த படுக்கை யானவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிப்.10ந் தேதி முதல் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர் தொடர் மறி யல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் மாநில மாற்றுத்திற னாளிகள் ஆணையரகம் முன்பு 3 நாட்கள் மறியல் நடத்தினர். அதனை தொடர்ந்து வட்டாட்சியர அலு வலங்கள் முன்பு மறியலில் ஈடுபட்ட னர். மேலும், மாவட்டங்களில் ஆட்சி யர் அலுவலகங்கள் முன்பு மறியல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மாநில அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கை செவ்வாயன்று (பிப்.17) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. இதனையடுத்து ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கள் சுவாமி சிவானந்தா சாலையில் ஒன்று திரண்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி, பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் எஸ்.மனோன்மணி (மத்தியசென்னை), எஸ்.ராணி (வடசென்னை), எம்.குமார் (தென்சென்னை) தலைமையில் முதல மைச்சரிடம் முறையிட ஊர்வலமாக புறப்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜான்சிராணி, “உதவித் தொகையை உயர்த்தக்கோரி தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழக அரசு உதவித்தொகையை உயர்த்துவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனையடுத்து முதலமைச்சரை சந்தித்து முறையிட சென்றவர்களை காவல்துறை கைது செய்கிறது. உதவித்தொகை உயர்வு அறிவிக்கும் வரை எத்தனை நாட்களானாலும் போராட்டம் தொடரும். உதவித்தொகை உயர்வு கேட்டு கடந்த 4 வருடமாக போராடி வருகிறோம். அண்டை மாநிலங்கள் உயர்த்தி வழங்கும்போது தமிழக அரசால் வழங்க முடியாதா? மாற்றுத்திறனாளிகளின் துயரங்களை புரிந்து கொண்டு முதலமைச்சர் உதவித்தொகையை உயர்த்த வேண்டும்” என்றார். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களை ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டு சென்ற னர். இரவு தடுப்பு காவலில் வைத்தி ருந்தவகளை திருமங்கலத்தில் உள்ள பெரியார் சமூக நலக்கூடத்திற்கு அழைத்து செல்வாக கூறி ஒரு பகுதியினரை 17 பேருந்துகளில் காவல்துறையினர் ஏற்றி சென்றனர். மாற்றுத்திறனாளிகளை கோயம்பேடு, கிளம்பாக்கம், தாம்பரம் பேருந்துநிலையங்களுக்கு கொண்டு சென்றனர். பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் இருந்து இறக்கிவிட காவல்துறையினர் முயற்சித்தபோது, அங்கேயே மறியலில் ஈடுபடுவோம் என்று மாற்றுத்திறனாளிகள் எச்சரித்தனர். இதன்பிறகு பேருந்துகளிலேயே வைத்து மாற்றுத்திறனாளிகளை அலைகழித்தனர்.