ஒன்றிய அரசைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
5 Mar 2026, 3:59 pm
<p><strong>பணியாளர் இழப்பீட்டு சட்டப்படி இழப்பீடு கேட்டு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்</strong></p>
<p>ஈரோடு, மார்ச் 5- பணியாளர் இழப்பீட்டு சட்டப்படி, இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கொடுமுடி வட்டாட்சி யர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஈஞ்சம்பள்ளி கிராமம், முத்துக் கவுண்டன்பாளையதை சேர்ந்தவர் எஸ்.தனபாக்கியம். இவர் வட்டக்கல் வலசில் வசித்து வரும் வி.எஸ்.சென்னி யங்கிரி என்பவருக்கு சொந்தமான கயிறு திரிக்கும் குடோனில் தொழிலா ளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 25.7.2009 ஆம் தேதியன்று பணி நேரத் தில் ஏற்பட்ட விபத்தில், வலது கை மணிக்கட்டுக்கு மேல் சிதைந்து, முழங்கைக்கு கீழே உள்ள கை அகற்றப் பட்டு நிரந்தரமாக ஊனம் ஏற்பட்டு விட் டது. இந்நிலையில், அவர் இழப்பீடு கோரி பணியாளர் இழப்பீட்டு ஆணை யர் மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு ஜன.4 ஆம் தேதியன்று வழங்கப்பட்டது. அதில், விபத்து நடை பெற்ற தேதியிலிருந்து இழப்பீட்டு தொகை ரூ.2லட்சத்து 49 ஆயிரத்து 288யை வழங்கும் வரை 12% வட்டியை கணக்கிட்டு வழங்க வேண டும் என்று கூறப்பட்டது. இவ்வாணை கள் கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக் குள் தொழிலாளர் இணை ஆணை யர், ஈரோடு என்ற பெயருக்கு எடுக்கப் பட்ட வங்கி கேட்பு வரைவோலை (Demand Draft) மூலம் இம்மன்றத் தில் வைப்பீடு செய்யுமாறு எதிர்மனு தாரருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, உத்தரவின் மீது மேல் நடவ டிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சி யரிடம் புகாரளிக்கப்பட்டது. அதன் பேரில் கடந்த கடந்தாண்டு ஜூலை 22 ஆம் தேதியன்று கொடுமுடி வட்டாட்சி யருக்கு, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து குறிப்பாணை அனுப்பப்பட் டது. அதில், மேற்படி தொகையை வரு வாய் வசூல் சட்டம் 1964 பிரிவு 5-ன் கீழ் வசூல் செய்யுமாறு உத்தரவிடப்பட் டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்து விட்டது. இவ்வாறு மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர், விபத்தில் வலது கை ஊனம் ஆகி 16 ஆண்டு காலம் முடிந்துவிட் டது. வேறு வேலைக்கு சென்று தனது குடும்பத்தை பாதுகாக்க தேவையான வருமானம் ஈட்ட முடியாமல் தவித்து வரும் மாற்றுத்திறனாளிக்கு இழப் பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் புத னன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். கொடுமுடி வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் சங்க தாலுகா செயலாளர் எம்.சசி தலைமை வகித் தார். இதையடுத்து பேச்சுவார்த்தை மேற்கொண்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர், விரைவாக நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர். அதன்பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, பேச்சுவார்த்தையில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து, காசிபாளை யம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கே. துரைராஜ், மாற்றுத்திறனாளி சங்க மொடக்குறிச்சி தாலுகா செயலாளர் லோகநாதன், துணைத்தலைவர் புஷ்ப ராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
