உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
11 Nov 2025, 3:41 pm
<p><strong>உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்</strong></p>
<p>சென்னை, நவ. 11- உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சி யர் அலுவலகங்களை செவ்வாய்க் கிழமை முற்றுகையிட்டு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் 75 விழுக்காட்டிற்கு கீழ் ஊனமுடையவர்களுக்கு 1500 ரூபாயும், அதற்கு மேல் ஊனமுடை யவர்களுக்கு 2000 ரூபாயும் மாதாந் திர உதவித்தொகையாக வழங்கப் படுகிறது. இது போதுமானதல்ல என்று சங்கத்தினர் கூறுகின்றனர். புதுச் சேரி மாநிலத்தில் 3000 முதல் 4800 ரூபாய் வரையும், ஹரியானா மாநிலத் தில் 3500 ரூபாயும், தெலுங்கானா வில் 4016 ரூபாயும் வழங்கப்படு கிறது. ஆந்திராவில் சாதாரண ஊனமுற் றோருக்கு 6000 ரூபாயும், கடும் ஊன முற்றோருக்கு 10000 ரூபாயும், அதிக ஆதரவு தேவைப்படும் கடும் ஊன முற்றோருக்கு 15000 ரூபாயும் மாதாந் திர உதவித்தொகையாக வழங்கப் படுகிறது. வளர்ச்சி அடைந்த மாநி லங்களின் 9 ஆவது இடத்தில் உள்ள ஆந்திர அரசால் உதவித்தொ கையை உயர்த்தி வழங்கும்போது, இரண்டாவது இடத்தில் உள்ள தமிழக அரசு வழங்க மறுப்பது ஏன் என்று சங்கத்தினர் கேள்வி எழுப்பு கின்றனர். எனவே ஆந்திராவைப் போன்று தமிழ்நாட்டிலும் உதவித்தொ கையை உயர்த்தி வழங்க வலியு றுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாநிலத் தலை வர் டி.வில்சன், மாநிலச் செயலாளர் பா.ஜான்சி ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் 40 மையங் களில் 14,160 பேர் கலந்து கொண்ட னர். மதுரையில் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், செங்கல்பட்டில் மாநிலத் துணைத் தலைவர் பி.எஸ்.பாரதிஅண்ணா, திருவண்ணாமலையில் மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் சி.ரமேஷ்பாபு, கள்ளக்குறிச்சியில் மாநிலத் துணைத் தலைவர் வி.ராதா கிருஷ்ணன், திண்டுக்கல்லில் மாநி லச் செயலாளர் எஸ்.பகத்சிங், திருப் பூரில் மாநிலச் செயலாளர் பி.ராஜேஸ், தர்மபுரியில் மாநிலத் துணைச் செய லாளர் வி.தமிழ்செல்வி, கிருஷ்ண கிரியில் மாநிலத் துணைச் செயலா ளர் வி.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவை, திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, தூத்துக் குடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் என்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட் டம் நடைபெற்றது. இன்று பேச்சுவார்த்தை! மாற்றுத்திறனாளிகளின் இந்த முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, புதன்கிழமை (நவ.12) சென்னை தலைமைச் செயல கத்தில் பேச்சுவார்த்தை நடத்துவ தற்கு தலைமைச் செயலாளர் நா.முரு கானந்தம் அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட சங்கத் தலை வர்கள் போராட்டத்தை தற்காலிக மாக ஒத்தி வைத்தனர்.</p>
<p> </p>
