முந்தய பக்கம்

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

13 Nov 2025, 3:30 pm
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
<p><strong>தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை</strong></p> <p>தூத்துக்குடி, நவ.13- &nbsp;தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆந்திராவைப் போல தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மையைப் பொறுத்து 6 ஆயிரம், 10 ஆயிரம் ,15 ஆயிரம் எனும் மாத உதவித்தொகையாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. &nbsp;போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் சாலமன் &nbsp;போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணகுமார் துணை செயலாளர் மாடசாமி மாவட்ட குழு உறுப்பினர்கள் மணி, மந்திரம் , கனகா, &nbsp;பலவேசமுத்து துணைச் செயலாளர் திருமண செல்வி, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram