மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
11 Feb 2026, 6:11 pm

மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக மாநிலம் தழுவிய தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தை போல மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற சாலை மறியலில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவர் என்.வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் பி.வேலு, மாவட்ட பொருளாளர் எஸ்.மீனாட்சி, கே.சுதா, எம்.பத்மாவதி மற்றும் பல்வேறு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நடேசன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆளவந்தார் தொடக்க உரையாற்றினார். துணைத் தலைவர்கள் ராசையன், அப்துல் ஹமீது, இணைச் செயலாளர் வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த மறியலில் 91 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.