கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
17 Dec 2025, 4:11 pm

வீட்டுமனைக்காக மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு!

ஈரோடு, டிச.17- மொடக்குறிச்சி வட்டத்தில் வீட்டுமனை கேட்ட மாற்றுத்திற னாளிகள் அலைக்கழிக்கப்படுவ தாகப் புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி வட்டத்தில் போதுமணி மற்றும் சீனிவாசன் ஆகியோ ருக்கு, அரச்சலூர் பேரூராட்சிக் குட்பட்ட புதுப்பாளையம் பகுதி யில் இலவச வீட்டுமனை வழங்கப் பட்டது. அந்த இடத்தில் குடியேறு வதற்காக குடிசை அமைத்தனர். ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சக்திகள் குடிசையைப் பிரித்து எரிந்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதர வாக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார் பில் போராட்டம் அறிவிக்கப்பட் டது. இதைத்தொடர்ந்து குலூர் ஊராட்சியில் வீட்டுமனை வழங் கப்படும் என உறுதியளிக்கப்பட் டது; இடமும் காட்டப்பட்டது. ஆனால், பட்டா வழங்கப்பட வில்லை. இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு நடையாய் நடந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்ததில் ஏற்கனவே வழங் கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, அதிகாரிகள் அலட்சி யப்படுத்தாமல் உடனடியாக மாற் றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வருமான வரித்துறை, தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், டிச.17- காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரு மான வரித்துறை மற்றும் தபால் ஊழியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். 50% டிஏ உயர்வை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளுக்காக வருமான வரித்துறை ஊழியர் சங்கத்தினர் செவ்வா யன்று சேலம் வருமான வரி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருமானவரித்துறை ஊழியர் சங்க நிர்வாகி எம்.கந்தபாலன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகிய இந்திய பென்சன் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் டி. நேதாஜி சுபாஷ், நிர்வாகிகள் கே.ஆர்.கணேசன், கணபதிசுந்தரம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் தலைமை அஞ்சலகத்தின் முன்பு அஞ்சல் ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.