முந்தய பக்கம்

உதவித்தொகையை உயர்த்திக் கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் அறிவிப்பு

25 Nov 2025, 3:29 pm
உதவித்தொகையை உயர்த்திக் கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் அறிவிப்பு
<p><strong>உதவித்தொகையை உயர்த்திக் கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் அறிவிப்பு</strong></p> <p>ஈரோடு, நவ.25- உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி டிச.1 ஆம் &nbsp;தேதியன்று போராட்டம் நடைபெறவுள்ளதாக, மாற்றுத்திற னாளிகள் சங்கம் அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழக்கப்படும் உதவித்தொ கையை ரூ.6000, ரூ.10000, ரூ.15000 என உயர்த்தி வழங்க &nbsp;வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக்கி, கூலியை உயர்த்த வேண்டும். அப்பணியை நகர் பகுதிகளுக்கும் விரி வாக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை நேரம் 4 மணி என்பதை உறுதி செய்ய வேண்டும். வீடு, வீட்டு &nbsp;மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கை களை ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை அறைகூவல் விடுத்துள்ளது. அதன்படி, டிச.1 &nbsp;ஆம் தேதியன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு ஆர்ப் பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க ஈரோடு மாவட்டத் தலைவர் டி.சாவித்திரி, செயலாளர் ப.மாரி முத்து ஆகியோர் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram