முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

10 Dec 2025, 4:08 pm
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
<p><strong>மாற்றுத்திறனாளிகள் போராட்டம்</strong></p> <p>சேலம், டிச.10- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஐந்த &nbsp;அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்த வட்டாட்சியர் பேச்சு &nbsp;வார்த்தையால் உடன்பாடு ஏற்பட்டது. நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 &nbsp;மணி நேர வேலை, முழு ஊதியம் மற்றும் தொடர்ச்சியாக வேலை வழங்குவதற்கு உத்திரவாதப்படுத்திட வேண்டும். &nbsp;விண்ணப்பித்துள்ள, தகுதியான அனைத்து மாற்றுத்திறனா ளிகளுக்கும் உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க &nbsp;நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டாட்சி யர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங் கத்தினர் புதனன்று தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர். எடப்பாடி வட்டாரத்தலைவர் வடிவேல் தலைமை யில் நடைபெற்ற இப்போராட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம். குணசேகரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. கணபதி உள்ளிட்ட &nbsp;பலர் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரப்போராட்டத்திற்கு பின்பு போராட்டத் தாரர்களை வட்டாட்சியர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து &nbsp;சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram