கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
11 Nov 2025, 3:41 pm

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வெற்றி அடையாள அட்டை முகாம் இடமாற்றம்

திருப்பூர், நவ.11- திருப்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரகத்தில் இந்த முகாம் நடைபெற்று வந்த நிலையில், திடீரென திருப்பூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்த முகாம் மாற்றப்பட்டது. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் ஆளாகினர். எனவே பழையபடி மாவட்ட ஆட்சியரகத்துக்கு மாற்ற வேண்டும் என அனைத்து வகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் வலியுறுத்தினர். ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து மீண்டும் இடமாற்றம் செய்யபட்டு வழக்கம் போல் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் வாரந் தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியரக வளா கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் அறை எண் 20-ல் இம்முகாம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

நாளை மின்தடை

நாளை மின்தடை திருப்பூர், நவ.11- பழங்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராம ரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

விவசாய நிலத்தை அளந்து தர கோரிக்கை

திருப்பூர், நவ.11 - திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, வடசின் னாரிபாளையம் ஊராட் சிக்கு உள்பட்ட பொன்னாங் காளி வலசு, வீணம்பாளை யம், கல்லாங்காட்டுப் புதூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 51 குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு 1994ஆம் ஆண்டு காடையூர் கிராமம் மற்றும் வடசின்னாரிபாளை யம் கிராமப் பகுதியில் தலா ஒரு ஏக்கர் வீதம், மொத்தம் 51 ஏக்கர் நிலம் ஒப்படை ஆணைகள் பிறப்பிக்கப்பட் டன. ஆனால் நிலம் அளவீடு செய்து கொடுக்கவில்லை. எனவே அளவீடு செய்து, எஃப் பட்டா நகல் வழங்கி, விவசாயம் செய்ய நடவ டிக்கை எடுக்குமாறு ஆதித்த மிழர் ஜனநாயகப் பேரவை தலைமையில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சிய ரிடம் மனு அளிக்கப்பட்டது.