தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குழந்தைக்கு பார்வை கிடைக்க அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை

16 Nov 2025, 3:30 pm
குழந்தைக்கு பார்வை கிடைக்க அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை
<p><strong>குழந்தைக்கு பார்வை கிடைக்க அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை</strong></p> <p>திருவள்ளூர், நவ.16- பார்வையற்ற வருண் &nbsp;என்ற 4 வயதுக் குழந்தைக்கு இலவச சிகிச்சை அளிக்க வும், நிலுவையில் உள்ள &nbsp;மாற்றுத்திறனாளி உதவித் தொகையை உடனடியாக வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு மாற்றுத்திறனா ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் லோக நாதன் மற்றும் அவரது மனைவி நந்தினி தம்பதி க்கு 4 வயதாகும் மகன் வருண் பிறந்தது முதல் முற்றிலும் பார்வை இழந்த நிலையில் உள்ளார். மக னின் பார்வைக்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது, கண்களு க்குச் செல்லும் நரம்புகள் வளர்ச்சி அடையாமல் செய லிழந்து காணப்படுவதாகக் கூறி மருத்துவர்கள் கைவிட் டுள்ளனர். இந்நிலையில், பார்வையற்ற மகனின் எதிர்காலத்துக்காக அரசு &nbsp;உதவித்தொகை பெறுவதற் காக இரண்டு ஆண்டு களுக்கும் மேலாக பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் சென்று உரிய சான்றிதழ் களைப் பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, லோக நாதன் - நந்தினி தம்பதியர் கும்மிடிப்பூண்டி வட்டாட்சி யர், பொன்னேரி கோட்டாச்சி யர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரி களிடம் மனு அளித்துள் ளனர். இதன் விளைவாக, கும்மிடிப்பூண்டி தனி வட்டா ட்சியர், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிக ளுக்கான உதவித்தொகை யான ரூ.1500ஐ வழங்க 13.8.2023 அன்று ஆணை பிறப்பித்தார். இருப்பினும், இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை என பெற்றோர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபோது, செப்டம்பர் 9ஆம் தேதி உரிய பதில ளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இது குறித்து கருத்து தெரி வித்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.கீதா, பார்வையிழந்த 4 வயது குழந்தை வருணுக்கு நிலுவையில் உள்ள உதவி த்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், எல்லாவற்றுக்கும் மேலாக வருணுக்கு பார்வை கிடைக்க தமிழ்நாடு அரசு &nbsp;உரிய மருத்துவ சிகிச்சை களை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலி யுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.