முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளி விவசாயிக்கு நீர் மறுப்பு

27 Feb 2026, 5:32 pm
மாற்றுத்திறனாளி விவசாயிக்கு நீர் மறுப்பு
<p><strong>மாற்றுத்திறனாளி விவசாயிக்கு நீர் மறுப்பு</strong></p> <p>உடுமலை, பிப்.27- மாற்றுத்திறனாளி விவ சாயியின் நிலத்திற்கு வரும் பாசனக் கால்வாயை சட்ட விரோதமாக அடைத்துள்ள நபர்கள் மீதும், அதற்கு துணை போகும் அதிகாரி கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, மாற்றுத்திற னாளிகள் சங்கத்தினர் உடுமலை வட்டாட் சியர் அலுவலகத்தை வெள்ளியன்று முற்று கையிட்டனர். உடுமலைப்பேட்டை தாலூகா, புங்கமுத் தூர் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி விவசாயி முருகவேல். இவருக்கு சொந்த மாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. பி.ஏ.பி திட்டத்தின் கீழ், திருமூர்த்தி அணை யிலிருந்து இவரது நிலத்திற்கு அரணி வாய்க்கால் வழியாக தண்ணீர் வர வேண் டும். தற்போது பாசனத்திற்காக தண் ணீர் திறக்கப்பட்டு முதல் சுற்று முடிந்துள்ள நிலையில், முருகவேலின் நிலத்திற்கு வர வேண்டிய வாய்க்காலை சில நபர்கள் சட்ட விரோதமாக அடைத்துள்ளனர். இதனால் அவரது நிலத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது &nbsp;குறித்து காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. பொதுப்பணித்துறையினர் வரு வாய்த்துறையை அணுகுமாறு கூறிய நிலை யில், வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் மெத்தனம் காட்டி &nbsp;வருவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். அதிகாரிகளின் பாராமுகத்தை கண்டித் தும், மாற்றுத்திறனாளி விவசாயிக்கு நியா யம் கோரியும் உடுமலை வட்டாட்சியர் அலுவ லகம் முற்றுகையிடப்பட்டது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram