தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் ஆவேச மறியல்

10 Feb 2026, 4:50 pm
மாற்றுத்திறனாளிகள் ஆவேச மறியல்

மாற்றுத்திறனாளிகள் ஆவேச மறியல்

பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் சி. ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர். சிவாஜி, மாவட்டப் பொருளாளர் பி. சத்யா  உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கடலூரில் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களைப் போல் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகையை ரூ.15 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி வழங்கக் கோரித் திருப்பாதிரிப்புலியூர் சீமாட்டி சிக்னல் அருகே மறியல் நடைபெற்றது. போராட்டத்திற்கு இணைச் செயலாளர் வசந்தி தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஆளவந்தார் சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ராசையா, அப்துல் ரகுமான், ராதாகிருஷ்ணன், இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், சாமிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரைப் போலீசார் கைது செய்தனர்.

பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நான்குமுனை சந்திப்பை நோக்கிப் பேரணியாகச் சென்ற சங்கத்தினர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத் தலைவர் என். வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். மாநிலத் துணைச் செயலாளர் எம்.கே. பழனி, மாவட்டச் செயலாளர் பி. வேலு, மாநிலக் குழு உறுப்பினர் எம். ஆறுமுகம், மாவட்ட நிர்வாகிகள் எஸ். மீனாட்சி, கே. சுதா, மாவட்டத் துணைத் தலைவர் எம். பத்மாவதி, கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பரத், செல்வம், கே. செல்வம், ஐயம்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். செயலாளர் பெரியசாமி, எஸ்.ஆர். ஜெயராமன், மகாலிங்கம், கோட்டீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 220 பேர் கைது செய்யப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.