முந்தய பக்கம்

இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு

4 Oct 2026, 11:34 pm
இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு
<p><strong>இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு</strong></p><p>சென்னை, அக்.4 -பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் (94) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை (அக்.3) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கமலஹாசன் மற்றும் துறையினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.</p><p>1931 செப்.21 ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள உதயகிரியில் பிறந்தவர், சிங்கீதம் சீனிவாச ராவ். சென்னை பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 60 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். தமிழில் ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். 2013-இல் வெளியான ‘வெல்கம் ஒபாமா’ என்ற படத்தை இயக்கிய அவர், பிறகு வயது முதிர்வு காரணமாக சினிமாவில் இருந்து விலகினார்.இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அன்னாரது இறுதிநிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram