தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

59 minutes before
தீக்கதிர் விரைவு செய்திகள்

அரசு மரியாதையுடன் இன்று இறுதி நிகழ்ச்சி

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் விருப்பப்படி அவரது கண்கள், மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப் பட்ட நிலையில், அவரது உடல் ஞாயிற் றுக்கிழமை (ஜூன் 28) பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தக னம் செய்யப்படுகிறது. பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல மைச்சர் விஜய் அறிவித்திருப்பது குறிப்பி டத்தக்கது. பாக்யராஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ்த் திரைப் படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஜூன் 28 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

பினராயி இரங்கல்

பாக்யராஜ் மறைவுக்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முத லமைச்சருமான பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். “பாக்ய ராஜ் தனது சிறந்த படைப்புகள் மூலம் மலையாளிகளின் அன்பை யும் பெற்றவர்,” என்றும்; “அவரது மறைவு திரைப்பட உலகிற்கும் கலாச்சாரத்துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு” என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

அமோனியா கசிவு; பலி 16 ஆக உயர்வு

சென்னை, ஜூன் 27- திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயின்ட் பீட்டர் பால் என்ற பெயரில் மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவு பொருட்களை பதப படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. சென்னை வண்ணா ரப்பேட்டையை சேர்ந்த ஜோசப் ஜெகன் (48), மோகன் (59) ஆகியோர் நடத்தி வரும் இந்த நிறுவனத்தில், கடந்த ஜூன் 21 அன்று அமோ னியா வாயுக் கசிவு ஏற்பட்டு, இதுவரை வட மாநிலங்க ளைச் சேர்ந்த 15 பேர் வரை உயிரிழந்திருந்தனர். இந் நிலையில், சென்னை ஸ்டா ன்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கபிதா ஜுங்கா (18) என்ற இளம் பெண் சனிக்கிழமையன்று பலியானார். இவர் ஒடிசா வை சேர்ந்தவர் ஆவார். இத னால், அமோனியா வாயுக் கசிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந் துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.