மதுரை மத்திய தொகுதியில் மூத்த குடிமக்களுக்கு 12டி விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கல்
21 Mar 2026, 2:42 pm
<p><strong>மதுரை மத்திய தொகுதியில் மூத்த குடிமக்களுக்கு 12டி விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கல்</strong></p>
<p>மதுரை, மார்ச் 21- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதி ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனொரு பகுதியாக, தபால் வாக்கு செலுத்த விரும்பும் மூத்த குடிமக்க ளுக்கான 12டி விண்ணப்பங்கள் சனிக்கிழமை தேர்தல் அதிகாரிகள் மூலம் வீடு தோறும் நேரடியாக வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம், மாற்றுத் திறனாளிகள், உடல்நிலை அல்லது வயது காரணமாக வாக்குச்சாவடிக்கு நேரில் செல்ல முடியாத மூத்த குடிமக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தும் வாய்ப்பு பெறுகின்றனர். மேலும், தேர்தல் ஆணையம் வழங்கி யுள்ள வழிகாட்டுதலின்படி, 12டி விண் ணப்பங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவையான தகவல்களை நிரப்பி, உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
