முந்தய பக்கம்

திண்டுக்கல்லில் 266 செம்மலர் சந்தாக்கள் வழங்கல்

31 Oct 2026, 10:10 pm
திண்டுக்கல்லில் 266 செம்மலர் சந்தாக்கள் வழங்கல்

திண்டுக்கல்லில் 266 செம்மலர் சந்தாக்கள் வழங்கல்

திண்டுக்கல், அக்.31- திண்டுக்கல் சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க அலுவலகமான தோழர் வி.பி.சிந்தன் நினைவரங்கில் செம்மலர் மாத இதழ் சந்தா வழங்கும் விழா நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் முத்துச்சாமி தலைமை வகித்தார்.கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்ராமலிங்கத்திடம் 266 செம்மலர் சந்தாக்களுக்கான தொகை 71,740 ரூபாயை திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கே.பிரபாகரன் வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ராணி, மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் பி.ஆஸாத், எம்.ராமசாமி, எஸ். கமலக்கண்ணன், மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram