தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்தவர்களை கைது செய்திடுக!

7 Aug 2026, 11:38 pm
பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்தவர்களை கைது செய்திடுக!

பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்தவர்களை கைது செய்திடுக!

திண்டுக்கல், ஆக.7-திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே தங்கம்மாபட்டி முடக்குப்பட்டியில் உள்ள பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனிதமலத்தை கலந்தது தொடர்பான விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே எல்லையில் அமைந்துள்ள ஊர் தங்கம்மாபட்டி முடக்குப்பட்டி. இந்த ஊரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் சில தினங்களுக்கு முன்பாக மனித மலத்தை கலந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வடமதுரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரையும் மாவட்டக் காவல்த்துறைக் கண்காணிப்பாளரையும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் அந்த பள்ளி அமைந்துள்ள பகுதியில் 13 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்ட போது பள்ளிக்காக 4ஏக்கர் 75 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் இந்த 13 குடும்பங்கள் வசிப்பதை காட்டாமல் வருவாய் ஆவணத்தில் பள்ளிக்கான இடமாக மாற்றி பள்ளியின் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. அப்போது அங்குள்ள 2 வீடுகளையும் இடித்தனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் ,சிபிஎம் கட்சியின் அலுவலகத்திற்கு வந்து உதவி கோரினர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் பழனி கோட்டாட்சியரிடம் முறைப்படி அம்மக்கள் மனுக்கொடுத்தனர். இதனையடுத்து நேரடியாக வந்து பார்வையிட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாகவே பள்ளி நிர்வாகத்தில் உள்ள ஆசிரியர்களில் சிலர் தூண்டுதல் பேரில் குடியிருப்பவர்களை காலி செய்ய பல்வேறு தொல்லைகள் கொடுத்தனர்.

இதனைக் கண்டித்து சிபிஎம் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தலைமையில் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 5 குடும்பங்களுக்கு மாற்று இடமும் அதற்கான பட்டாவும் வழங்கப்பட்டது. பாறைப்புறம்போக்கில் கொடுக்கப்பட்ட அந்த குடியிருப்புக்கு போவதற்குக் கூட பாதை இல்லாத நிலை உள்ளது. இந்த சூழலில் தான் அந்த அரசு பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாக பிரச்சனை எழுந்துள்ளது.

இது பள்ளி நிர்வாகத்தில் இருக்கும் சிலரால் நடத்தப்பட்ட திட்டமிட்ட செயலாகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே மாவட்ட ஆட்சியரும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் இந்த பிரச்சனையில் தலையிட்டு சுமூக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெள்ளியன்று திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுக்கொடுக்கப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், வடமதுரை ஒன்றியச்செயலாளர் மலைச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.கே.சம்சுதின், சங்கர், சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.