ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகள், அதிகாரிகள் இணைந்து செயல்படுகிறார்கள்
yesterday
<p><strong>ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகள், அதிகாரிகள் இணைந்து செயல்படுகிறார்கள்</strong></p><p>திண்டுக்கல், ஜூன் 21- திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்து சிண்டிகேட் அமைத்து செயல்படுவதாக தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் மு.கருணாகரன் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக மனு அளிக்குமாறு கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் பேசிய கருணா கரன், தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு ரூ.60, உரிக்காத தேங்காய்க்கு ரூ.30 மற்றும் கொப்ப ரைத் தேங்காய்க்கு ரூ.180 என குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண் டும் என்றார். மேலும், தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈ, வாடல் நோய், வேர்ப் புழு, கருவண்டு புழு, ஊசிப்புழு உள்ளிட்ட வற்றை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தற்போது தேங்காய் விலை கடுமை யாக சரிந்துள்ளதால் வியாபாரிகள் கொள் முதல் செய்ய முன்வரவில்லை என்றும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த வேளாண் துறை அதிகாரிகள், கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது தேங்காய் விலை சீராக இருப்ப தாகவும், கிலோ ரூ.45 வரை கொள்முதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நோய் தாக்குதலால் விளைச்சல் குறைந்த நிலையில், இந்த ஆண்டு விளைச் சல் அதிகரித்திருப்பதே விலை வீழ்ச்சிக்கு காரணம் என்றும் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து பேசிய கருணாகரன், மாவட் டத்தில் பல விற்பனை களங்கள் இருந்தபோதி லும் சில கார்ப்பரேட் நிறுவனங்களே விலை யை நிர்ணயிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், ஒட்டன்சத்திரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளிட மிருந்து நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்யப்படுவதில்லை என்றும், அதிகாரி கள் மற்றும் வியாபாரிகள் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எழுத்துப்பூர்வ மாக மனு அளித்தால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரி வித்தார். வேளாண் துறை அதிகாரிகளும், விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வரும் நாளில் வியாபாரிகளை வரவழைத்து ஏல விற்பனை நடத்த ஏற்பாடு செய்யத் தயா ராக இருப்பதாக தெரிவித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் எழுப்பிய கோரி க்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என அதி காரிகள் உறுதியளித்தனர்.</p>
