தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

17 May 2026, 8:56 pm
திருச்சி விரைவு செய்திகள்

சூறாவளி காற்றால் பாதிப்பு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்குக! விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திண்டுக்கல், மே.17 சூறாவளி காற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்டக் குழு கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் என்.பெரு மாள் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் கே.பி. பெருமாள், மாவட்டச் செயலாளர் எம்.ராமசாமி, மாவட்டத் துணைத் தலைவர் பி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சமீபத்தில் பழனி பகுதியில் வீசிய சூறைக் காற்று மற்றும் மழை காரணமாக நெல் வயல்கள் கடு மையாக பாதிக்கப்பட்டன. இதேபோல் மக்காச்சோளம், கொய்யா போன்ற பயிர்களும் பாதிக்கப்பட்டன. திண்டுக் கல் ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாழை, முருங்கை, மா, பப்பாளி, சில இடங்களில் திராட்சை தோட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக விவசாயிகள் பல லட்சம் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு திண்டுக்கல் ஆட்சியர் சர வணனுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

2 பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு

அருப்புக்கோட்டை, மே 17- அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி சர்ச் தெருவைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர் மனைவி ஸ்ரீதேவி(45). இவரது தம்பி பாண்டியராஜன் மனைவி சாந்தி(42), இவர் கோபாலபுரம் ஊராட்சியில் தூய்மை பணி யாளராக பணிபுரிந்து வருகிறார். ஸ்ரீதேவி தனியார் மருத்து வமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இருவரும் சர்ச் தெருவில் உள்ள சாந்தி யின் வீட்டில் கதவை திறந்து வைத்து உறங்கிக் கொண்டி ருந்தனர் அதிகாலை நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் இரு பெண்கள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் அலறி துடித்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உடலில் பற்றிய தீயை அணைத்துள்ளனர். பின்பு, இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. பின்பு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேன் கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு; 12 பேர் காயம்

விருதுநகர், மே 17- சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனை லோகநாதன் (35) ஓட்டி வந்தார். இந்நிலையில், விருதுநகர் -சாத்தூர் 4 வழிச் சாலையில் வந்த போது, எதிர்பாராத விதமாக அக்ரார்பட்டி விலக்கு அருகே பாலத் தடுப்புச் சுவரின் மீது வேன் மோதியது. இந்த விபத்தில் அம்பத்தூரைச் சேர்ந்த குமரன் (65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். மேலும், வேனில் பயணம் செய்த மூதாட்டி ரத்தி னம்மாள் (75), 9 வயது சிறுவன், 3 வயது சிறுமி மற்றும் மேரிசுஜா (42), ஆல்வின்(50), ஸ்ரீகுமார்(36), ஸ்ரீஜா(38) பிர வீன்குமார்(36), ரிக்கி(17), ஷில்பா(47), ஆடம் (17) ஆகி யோர் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்த வர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு மருத்து வர்கள் சிகிச்சையளித்தனர். இந்த விபத்து குறித்த வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

வாலிபர் சங்க புதிய கிளை

திருவில்லிபுத்தூர், மே 17- திருவில்லிபுத்தூர் நகர் கொலூர்பட்டி பகுதியில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்க புதிய கிளை அமைக்கும் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் சுமார் 20 இளைஞர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிளை செயலாளராக ஆதி ராஜா, கிளை தலைவராக வைரமுத்து ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட பொருளாளர் மனோப்ரியா, சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் மரியடேவிட், வழக்கறிஞர் யோகராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த் துரை வழங்கினர்.

இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை 3 இளைஞர்களுக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை

இராமநாதபுரம், மே 17- இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ஆண் நண்பருடன் கடற்கரைக்கு வந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, தங்க நகைகளை பறித்துச் சென்ற இளைஞர்கள் மூவருக்கு தலா 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் சனிக் கிழமை உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை திருக்கும ரன்நகரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் ஹரி கிருஷ்ணன் (19). இவரும் இவரது தோழியும் கடந்த 2 022-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி யை அடுத்த மூக்கையூர் கடற்கரைக்கு வந்தபோது, அந்த வழியாக வந்த நான்கு இளைஞர்கள் ஹரிகிருஷ்ணனை கட்டிப் போட்டு, அவரது தோழியான இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களிடம் இருந்த தங்கச் சங்கிலி, தோடு, மோதிரம் என 4 பவுன் தங்க நகைகள், 2 கைப்பேசிகள், ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக சாயல்குடி காவல்நிலைய போலீ சார் வழக்குப்பதிந்து, இராமநாதபுரம் மாவட்டம், கமுதி யை அடுத்த கே.வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்தரியப்பன் மகன் பத்மேஸ்வரன் (26), பசும்பொன் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் அஜித்குமார் (22), விருதுநகர் மாவட்டம், நத்தகுளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் தினேஷ்குமார் (26), தங்க நகைகளை விற்க உதவி செய்த பத்மேஸ்வரனின் தாய் வில்லம்மாள் ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர். இது தொடர்பான வழக்கு இராமநாதபுரம் மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பத்மேஸ்வரன், தினேஷ்குமார், அஜித்குமார் ஆகிய மூவருக்கும் தலா 30 ஆண்டு சிறைத் தண்டனை யும், ரூ.60 ஆயிரம் அபராதமும், வில்லம்மாளுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார். இதையடுத்து நான்கு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திருநெல்வேலி, மே 17- பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியாக பாபநாசம் அகஸ்தியர் அருவி உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் தினமும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியில் குவிந்தனர். சனிக்கிழமை மட்டும் 500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவிக்கு சென்றதால் பாபநாசம் வனச் சோதனைச் சாவ டியிலிருந்து கோவில் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமையன்றும் மக்கள் குவிந்தனர்.

மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து குறைவு

திருநெல்வேலி, மே 17- மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்துள்ளது. மணிமுத்தாறு மலையில் ஊத்தில் 3.8 செ.மீ., மழை பெய்துள்ளது. நாலுமுக்கு 3.1, காக்காச்சி 2.7, மாஞ்சோலை 2.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. மணிமுத்தாறில் 24 மணி நேரத்தில் மழை எதுவும் பெய்யவில்லை. இதனால் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு வெறும் 5 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் 73.85 அடி தண்ணீர் உள்ளது. கடந்தாண்டு இதே நாளில் அணையில் 84.69 அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அருமனையில் ஆண் சடலம் மீட்பு

அருமனை, மே 17- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை சந்திப்பில் குடிபோதையில் மற்றும் மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் சுற்றித் திரிவதும் படுத்து தூங்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அருமனை சந்திப்பில் தனியார் கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று காலையில் சுமார் 55வயது மதிக்கத்தக்க ஒருவர் மூச்சுப் பேச்சு இல்லாமல் கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். பின்னர் அருமனை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து,விசாரணை நடத்தினர். விசாரணையில் மார்த்தாண்டம் ஆர்சி தெருவை சேர்ந்த ஜார்ஜ் என்பவரது மகன் கிளிட்டஸ் (வயது 55 )என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கிளிட்டசின் மனைவி அமலா ஜூலியட் பெர்க்மன்ஸ் அருமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் அடிப்படையில் அருமனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

தென்காசி, மே 17- தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஆலங்குளம் அருகிலுள்ள காளத்திமடத்தில் மதுபோதையில் கிணற்றுக்குள் விழுந்தவர் மரணமடைந்தார். ஆலங்குளம் அருகிலுள்ள காளத்திமடத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் காமராஜ் வயது (50). இவருக்கு லெட்சுமி என்ற மனைவியும் விக்னேஷ் என்ற மகனும் பவானி என்ற மகளும் உள்ளனர். குடும்பத்துடன் நீண்ட நாட்களாக சென்னை சர்மா நகரில் வசித்து வந்த காமராஜ் தனது சொந்த ஊரான காளத்திமடத்தில் நடைபெற்று வரும் கருப்பசாமி கோவில் கொடையில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் வந்திருந்தார். சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் காளத்திமடத்திலுள்ள குவாரி அருகே உள்ள கிணற்றடியில் அமர்ந்து மது அருந்தினார். போதையில் காமராஜ் கிணற்றில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் காமராஜ் வீட்டிற்கு வராததால் அவரை தேடிய குடும்பத்தினர் அவரது செருப்புகள் கிணற்று அருகில் இருந்ததைப் பார்த்தனர். கிணற்றில் பார்த்தபோது காமராஜின் உடல் கிடப்பதை கண்டு கடையம் காவல் நிலையத்திற்கு தகவலளித்துள்ளனர். இதையடுத்து கடையம் காவல் ஆய்வாளர் தகவலின் பேரில் சுரேஷ்குமார் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் வந்து கிணற்றிலிருந்து காமராஜின் சடலத்தை இரவு 12 மணியளவில் மீட்டனர். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

புளியங்குடியில் வீடு வீடாகச் சென்று புகையிலை பொருள் விற்றவர் கைது

தென்காசி,மே 17- தென்காசி மாவட்டம், புளியங்குடியில் வீடு வீடாகச் சென்று புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். புளியங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ரசியமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து புளியங்குடி காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் பவுல் தலைமையில் போலீஸார் டி.என்.புதுக்குடி கற்பக வீதி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவரை சோதனை செய்ததில், பைக்கில் சீட்டுக்கு அடியில் புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் டி.என். புதுக்குடி சீதாராமன் மகன் முனியசாமி (29) என்பதும், அவர் மெயின் ரோட்டில் டீக்கடை வைத்திருப்பதும் தெரிய வந்தது. இவர் டீக்கடையில் மட்டுமின்றி நேரடியாக வீடு வீடாகச் சென்று கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு புகையிலைப் பொருட்களை சப்ளை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரது கடையில் சோதனை நடத்தினர். அங்கு சுமார் 14 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.11 ஆயிரம் மற்றும் அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது

கும்பகோணம், மே 17- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்டம், சுவாமிமலை காவல் சரகத்திற்குட்பட்ட திருவல ஞ்சுழி மணப்படையூர் ரோடு ரயில்வே கேட் அருகில் உரிமம் பெறாமல் வெடிபொருட்கள் தயாரித்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. சுவாமிமலை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தை சோதனை செய்ததில் வெடிபொருட்கள் தயா ரிக்கும் மருந்துகள் மற்றும் காலி டப்பாக்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. மேற்படி, வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மருந்து 1 கிலோ மற்றும் காலி டப்பாக்களை கைப்பற்றி யதுடன், குற்றவாளிகளான திருவலஞ்சுழியைச் சேர்ந்த அருள் டேவிட்(33), அருள்செல்வம்(48), மணிகண்டன்(35) மற்றும் சசிமேரி(38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கயத்தாறு அருகே பைக் மீது லாரி மோதி மாட்டு வியாபாரி பலி

தூத்துக்குடி, மே 17- கயத்தாறு அருகே கடம்பூர் சாலையில் ஈச்சர் லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், மாட்டு வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா, அகிலாண்டபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (62). மாட்டு வியாபாரியான இவர், கயத்தாறில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடம்பூர் சாலை வழியாகச் சொந்த ஊரான சத்திரப்பட்டிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். கடம்பூர் சாலையில் உள்ள சோசியர் மடம் வளைவுப் பகுதியில் வந்த போது, எதிரே கடம்பூரில் இருந்து கயத்தாறு நோக்கி வந்த லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாகப் பால்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த அதிவேக மோதலில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்த பால்ராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், கயத்தாறு காவல் சார்பு ஆய்வாளர் காந்திராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த பால்ராஜை உடனடியாக மீட்டு அவசர சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று அவர் உயிரிழந்தார். உயிரிழந்த பால்ராஜிக்கு மனைவியும், மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த விபத்து குறித்து கயத்தாறு மற்றும் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோலார் நிறுவனத்தில் காப்பர் கேபிள் திருட்டு வாலிபர் கைது: 2 இருசக்கர வாகனம்் பறிமுதல்

தூத்துக்குடி, மே 17- கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சோலார் நிறுவனத்தில் நள்ளிரவில் காப்பர் கேபிள்களைத் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டத்திற்குட்பட்ட தெற்கு மயிலோடை பகுதியில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியின் ஒரு பகுதியாக அங்கு அமைக்கப்பட்டுள்ள சோலார் சேனல்களில் விலை உயர்ந்த காப்பர் கேபிள்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்தச் சோலார் பேனல்களில் பொருத்தப்பட்டுள்ள காப்பர் கேபிள்கள் தொடர்ந்து மர்மமான முறையில் திருடு போயின. இதையடுத்து, அந்நிறுவனத்தின் சார்பில் இரவு நேரங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமையன்று அதிகாலை நேரத்தில் நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர்களான இசக்கிமுத்து மற்றும் மாடசாமி ஆகிய இருவரும் சோலார் வளாகப் பகுதியில் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் சோலார் பேனல்களில் இருந்த காப்பர் வயர்களைத் துணிகரமாக வெட்டித் திருடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. பாதுகாப்பு ஊழியர்களைக் கண்டதும் அக்கும்பல் தப்பியோட முயன்றது. இது குறித்து அவர்கள் இருவரும் உடனடியாகப் பாதுகாப்பு மேற்பார்வையாளர் கிருஷ்ணனுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் கயத்தாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் நடத்தப்பட்ட அதிரடித் தேடுதல் வேட்டையில், காப்பர் கேபிள் திருட்டில் ஈடுபட்ட கயத்தாறு இந்திரா நகரைச் சேர்ந்த பாரதி என்பவரின் மகன் சின்னதுரை (25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், திருட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் சம்பவ இடத்திலிருந்து பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சின்னதுரையிடம் காப்பர் வயர்கள் எங்கு விற்கப்பட்டன என்பது குறித்தும், இந்தத் திருட்டில் தொடர்புடைய கயத்தாறு பகுதியைச் சேர்ந்த மேலும் சில கூட்டாளிகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.