வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கிடு மாணவர், வாலிபர்கள் பேரணி
25 May 2026, 10:51 pm
<p><strong>வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கிடு மாணவர், வாலிபர்கள் பேரணி</strong></p><p>திண்டுக்கல், மே 25- வேலையில்லா இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு எதி ர்ப்பு தெரிவிக்கும் வகையி லும் திண்டுக்கல்லில் தீப்பந்த பேரணி நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணி, ஆட்சியர் முகாம் அலுவல கம் எதிரில் உள்ள பேருந்து நிலையம் முன்பிருந்து தொடங்கியது. பேரணியில் பங்கேற்ற வர்கள் ஒன்றிய பாஜக அர சுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், தீப்பந்தங் களை ஏந்தியபடி நகரின் முக் கிய சாலைகள் வழியாக பேர ணியாக சென்றனர். இந்த பேரணி மணிக்கூண்டு பகுதி யில் நிறைவடைந்தது. பேரணிக்கு இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.கே.முகேஷ் தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் ரஞ்சித் சேகுவேரா, மாவட்ட பொருளாளர் பிரேம்குமார், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் தீபக்ராஜ், மாவட் டச் செயலாளர் நிருபன் மற்றும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ தொடர்பாளர் ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
