முந்தய பக்கம்

வீட்டு வேலை தொழிலாளர்கள் திண்டுக்கல்லில் மே தின விழா ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பங்கேற்பு

9 May 2026, 9:20 pm
வீட்டு வேலை தொழிலாளர்கள் திண்டுக்கல்லில் மே தின விழா ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பங்கேற்பு
<p><strong>வீட்டு வேலை தொழிலாளர்கள் திண்டுக்கல்லில் மே தின விழா ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பங்கேற்பு</strong></p><p>திண்டுக்கல், மே 9- திண்டுக்கல்லில் தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர்கள் நல அறக்கட் டளை சார்பில் மே தின விழா நடைபெற்றது. சனிக்கிழமை மாலை சகாய மாதா மக்கள் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சீதாலட்சுமி தலைமை தாங்கினார். மகா லட்சுமி வரவேற்புரை வழங்கினார். திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் சிறப்புரையாற்றினார். பங்குத்தந்தை பிலிப் சுதாகர் (தொழிலாளர் பணி குழு), பவித்ரா (அமைதி அறக் கட்டளை), ஏஐடியுசி மாநில குழு உறுப்பி னர் துரை சந்திரமோகன், பழனி நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, திண்டுக்கல் மாநகராட்சி உறுப்பினர் கே.எஸ். கணேசன், வழக்கறிஞர் ரமணி, பானுமதி, சுசிலா உள் ளிட்டோர் தொழிலாளர் உரிமைகள் மற்றும் நலன் தொடர்பாக பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram