தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 9 வார சம்பள நிலுவை உடன் வழங்க திண்டுக்கல் ஆட்சியரிடம் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு

2 Nov 2026, 8:55 pm
100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 9 வார சம்பள நிலுவை உடன் வழங்க திண்டுக்கல் ஆட்சியரிடம் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு

100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 9 வார சம்பள நிலுவை உடன் வழங்க திண்டுக்கல் ஆட்சியரிடம் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு

திண்டுக்கல், நவ.2-திண்டுக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 9 வாரச் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் திங்கட்கிழமை மக் கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தியிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 306 ஊராட்சிகளில் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ்பணிகள்நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் பெயர் மாற்றம் செய் யப்பட்டு, கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் விபி ஜி ராம் ஜி திட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 12 வாரங்களில் மூன்று வாரங்களுக்கு

மட்டுமே சம்பளம் வழங்கப்பட் டுள்ளது. இதனால் 9 வாரச் சம்பளம் நிலுவையில் உள்ளதால் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, நிலுவைச் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், வயதானவர்கள் மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்தவர்களால் கருவிழிப் பதிவு மூலம் வருகைப் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் தகுதியிருந்தும் பலர் வேலைவாய்ப்பை இழக் கின்றனர். எனவே, கருவிழிப் பதிவு முறையை ரத்து செய்து, வருகைப் பதிவேடு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ஒரே நேரத்தில் வேலை வழங்க வேண்டும். வேலை அட்டை வழங்கப்படாதவர்களுக் கும் உடனடியாக அட்டை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு 2 கி.மீ. சுற்றளவுக்குள் வேலை வழங்க வேண்டும். தற்போது 4 முதல் 5 கி.மீ. தொலைவில் வேலை வழங் கப்படுவதால் போக்குவரத்துச் சிரமங்களும் விபத்து அபாயங்களும் ஏற்படுகின்றன. பணித்தளப் பொறுப் பாளர்களையும் 100 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

இந்த மனுவை சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டச் செயலாளர் கே.அருள்செல்வன், துணைத் தலைவர்கள் பி.சுரேஷ், வி.அம்மையப்பன், துணைச் செயலாளர்கள் ஏ.முருகன், எம்.ரமேஷ் மற்றும் மாவட் டக் குழு உறுப்பினர்கள் அளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.