திருச்சி விரைவு செய்திகள்
22 Jul 2026, 9:33 pm

ஆலய திருவிழாவில் பட்டாசுகள் வெடித்து விபத்து

15 பேர் காயம் சின்னாளப்பட்டி, ஜூலை 22- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றி யம் சின்னாளப்பட்டி அருகே உள்ள வக்கம் பட்டியில் புனித அந்தோணியார் மற்றும் மதலைமேரி ஆலய திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மின் தேர் பவனி செவ்வாயன்று நள்ளிரவு ஆல யத்தின் முன்பிருந்து தொடங்கியது. அப்போது மின் தேரை வரவேற்பதற்காகப் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. எதிர்பாராதவிதமாக, அதிலி ருந்து வெளிவந்த தீப்பொறி அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதில் பட்டாசுகள் மொத்தமாக வெடித்துச் சிதறியதில், அங்கு திரண்டிருந்த பொதுமக் கள் மீது தீ பரவியது. இதனால் அதிர்ச்சிய டைந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த விபத்தில் கல்நாட்டாண்பட்டியைச் சேர்ந்த கரண் (24), திருச்சி மாவட்டம் டால் மியா பகுதியைச் சேர்ந்த வில்சன் (35), குட்டத்தாவரம்பட்டி மரிய லியோன் ராஜ் (21), வக்கம்பட்டி ஆரோக்கியசாமி (55), கொட்டப் பட்டி ராபின் அருள்ராஜ் (26), கும்மம்பட்டி லோகேஷ் (22), வக்கம்பட்டி மரியநிஷா (19), ஜான்சி (45), மரிய ஜாக்குலின் (33) மறவப் பட்டி டானியா (19) உள்ளிட்ட 15 பேர் தீக்காய மடைந்தனர். இவர்களை உடனடியாக மீட்டு, ஆட்டோ மற்றும் கார்கள் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்குச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தீவிரக் காயமடைந்த கரண் (24) திண்டுக் கல் தனியார் மருத்துவமனையிலும், கல்நாட் டான்பட்டியைச் சேர்ந்த பரத் கிருஷ்ணா (20) மதுரை அரசு மருத்துவமனையிலும் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது வழக்கு

சிவகாசி, ஜூலை 22- சிவகாசியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி ஆசாரி காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுமி 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் இவரது தாய்க்கும் விருது நகரைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கண்ணன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கண்ணன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

பட்டாசு பதுக்கியவர் கைது

சிவகாசி, ஜூலை 22- சிவகாசியில் மாடியில் செட் அமைத்து பட்டாசுகளை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகேயுள்ளது சித்துராஜபுரம். இங்குள்ள அழகம்மாள் நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி(60). இவர் தனக்கு சொந்தமான வணிக வளாகத்தின் மாடியில் செட் அமைத்துள்ளார். அதில் அரசின் அனுமதியின்றி பட்டாசு களை பதுக்கி வைத்துள்ளார். அங்கு ஆய்வு செய்த போலீசார், பட்டாசுகளை பறிமுதல் செய்ததோடு, அழ கர்சாமியையும் கைது செய்தனர்.

ஹவுரா எக்ஸ்பிரசில் கஞ்சா கடத்திய இருவர் கைது

விருதுநகர், ஜூலை 22- விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு புதனன்று காலை 5.20 மணிக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் ரயில் பெட்டிகளில் சோதனை செய்தனர். அதில் பயணம் செய்த பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த விகாஷ் (21) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விருதுநகரில் கட்டிட பணிக்காக வந்துள்ளதாக தெரி வித்துள்ளனர். பின்பு, அவர்களிடம் உள்ள பைகளை சோதனை செய்ததில் 2.7 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீ சார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கடமலைக்குண்டில் கஞ்சா: ஒருவர் கைது

தேனி, ஜுலை 22- கடமலைக்குண்டு அருகே காவல்துறையினர் நடத்திய சோதனையில் 5.800 கிலோ கஞ்சா பிடிப்பட்டது. இது தொடர்பாக விருதுநகரைச் சேர்ந்தவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். கடமலைக்குண்டு கிராமத்திற்கு சில நாட்களாக கஞ்சா கொண்டு வருவது கடமலைக்குண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலைத் தொடர்ந்து கடமலைக்குண்டு காவல்துறை யினர் இரவு பகல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அப்பொழுது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெத்தனசாமி மகன் முருகானந்தம் (52) என்பவர் கட மலைக்குண்டு கொம்புகாரன்புலியூர் பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டி ருந்தார். இதை அறிந்த கடமலைக்குண்டு காவல்துறை அதிகாரிகள், அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட தில் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தார். அதன் பின்பு அவர் வைத்திருந்த கைப்பையை பரிசோதனை செய்ததில் போதைப் பொருள் 5 கிலோ 800 கிராம் வைத்தி ருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

அண்ணா சமுத்திர கண்மாய் கரையை உடைத்து மண் திருட்டு? வருவாய்த் துறை, காவல்துறையினர் தீவிர விசாரணை

சின்னாளப்பட்டி, ஜூலை 22- திண்டுக்கல் மாவட்டம் அம்மை யநாயக்கனூரில் உள்ள அண்ணா சமுத்திர கண்மாயின் கரையை உடைத்து மண் அள்ளிச் சென்ற தாகக் கூறப்படும் சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர். அம்மையநாயக்கனூர் பேரூ ராட்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிரா மங்களின் குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு முக்கிய ஆதாரமாகவும் 48 ஏக்கர் பரப்பளவில் அண்ணா சமுத்திர கண்மாய் அமைந்துள்ளது. இந்நிலையில், கண்மாயின் பிரதான கரையோரத்தில் மர்ம கும்பல் ஒன்று ஜேசிபி இயந்தி ரங்கள் மூலம் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது. பின்னர் கண்மாய் கரையை உடைத்து மண்ணை அள்ளி அரு கிலுள்ள தோட்டப்பகுதியில் கொட்டியதாகவும் தகவல் வெளி யாகியுள்ளது. இதைக் கண்ட விவசாயி களும் பொதுமக்களும் பணியை தடுத்து நிறுத்தி, வருவாய்த் துறை யினருக்கும் காவல்துறையின ருக்கும் தகவல் தெரிவித்தனர். அதி காரிகள் சம்பவ இடத்திற்கு வருவ தற்குள் ஜேசிபி இயந்திரங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பிச் சென்ற தாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அளித்த புகா ரின் அடிப்படையில் மண் திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் வருவாய்த் துறையினரும் காவல்துறையின ரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், கண்மாயின் பிரதான கரையின் அடிப்பகுதியில் மண் அகற்றப்பட்டதால் கரை வலு விழந்துள்ளதாகவும், மழைக் காலம் தொடங்கும் முன் சேதம டைந்த கரையை சீரமைத்து, முட்புதர்களை அகற்றி கரையை முழுமையாக பலப்படுத்த வேண் டும் என்றும் விவசாயிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ள னர்.

ரூ.6 கோடி மதிப்பிலான கால்நடைத்துறை நிலம் போலி ஆவணங்களால் பதிவு செய்யப்பட்டதாக புகார்

சிவகாசி, ஜூலை 22- சிவகாசியில் அரசுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான கால்நடைத்துறை நிலம் போலி ஆவ ணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக அரசு அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சிவகாசியில் கால்நடைத்துறைக்கு சொந்தமான 61 சென்ட் நிலம் உள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.6 கோடி என கூறப்படுகிறது. இந்த நிலம் கடந்த மார்ச் மாதம் போலி ஆவணங்கள் மூலம் தனிநபர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் சிவகாசி கிழக்கு காவல்நிலையத்தில் அளித்த புகாரில், அர சுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நில புரோக்கர் செந்தில்குமார் மற்றும் விஜய் ஆகியோர் பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும், தற்போது அந்த நிலத்தை பிளாட்களாக பிரித்து விற்பனை செய்ய முயற்சி நடைபெற்று வருவதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்திய நிலை யில், சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.